Published:Updated:

Doctor Vikatan: சாப்பிட மறுக்கும் குழந்தை; திட உணவை எப்படிப் பழக்குவது?

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: சாப்பிட மறுக்கும் குழந்தை; திட உணவை எப்படிப் பழக்குவது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

என் குழந்தைக்கு 7 மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு அவனுக்கு திட உணவு கொடுக்கத் தொடங்கினேன். சாப்பாட்டை ஊட்ட ஸ்பூனை வாய் அருகில் கொண்டுபோனாலே அவன் தலையைக் கவிழ்ந்துகொள்கிறான். ஆனால், அவன் போதுமான அளவு தாய்ப்பால் குடிக்கிறான். அவனுக்கு திட உணவை எப்படிப் பழக்குவது? உணவு கொடுக்கும்போது உயரமான நாற்காலியில் அமர்ந்தபடி கொடுக்கிறேன். படுத்தநிலையில் ஊட்டலாமா?

- ராணி ஷர்மிளா (விகடன் இணையத்திலிருந்து)

எஸ். ஸ்ரீநிவாஸ்
எஸ். ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

``பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 - 8 மாதங்கள் வரையிலான ஊட்டச்சத்துகளில் 70 சதவிகிதம் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுகிறது. மீதமுள்ள 30 சதவிகித ஊட்டச்சத்தை திட உணவுகளின் மூலம கிடைக்கச் செய்யலாம். அதாவது நாளொன்றுக்கு 200 கிலோ கலோரிகள்.

குழந்தைக்கு 2 முதல் 3 டீஸ்பூன் அளவுக்கு தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகளுக்கு சரிவிகித உணவைத் தந்தாலே போதுமானது.

அதில் 2 ஸ்பூன் அரிசி சாதம், ஒரு ஸ்பூன் பருப்பு, 5 முதல் 9 சொட்டுகள் நெய் விட்டுக் கலந்து, ஒருநாளைக்கு 2 - 3 வேளைகள் கொடுத்தாலே போதுமானது. உணவின் அளவைவிட தரமே முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

குழந்தையை, தாய் தன் மடியில் உட்காரவைத்து சாப்பாடு ஊட்டுவதுதான் எப்போதும் சிறந்தது. படுத்தநிலையில் ஊட்டும்போது புரையேறும் ஆபத்து உள்ளதால் அதைக் கட்டாயம் தவிர்த்துவிடவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?