Published:Updated:

குறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan

குறட்டை
News
குறட்டை

குறட்டை... தீர்வுகாண முடியாத பிரச்னையா?

Published:Updated:

குறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan

குறட்டை... தீர்வுகாண முடியாத பிரச்னையா?

குறட்டை
News
குறட்டை

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவதற்காக ஓர் இளம் தம்பதி வந்திருந்தனர். `குழந்தையின்மையால் மனஉளைச்சலுக்கு ஆளான தம்பதியோ...?' என்று நினைத்து அவர்களிடம் பேச ஆரம்பித்த மருத்துவரிடம், `குறட்டைப் பிரச்னை தொடர்பாக ஆலோசனைபெற வந்திருக்கிறோம்' என்றனர். `கணவர் குறட்டை விடுவதால் பெரும் தொல்லையாக இருக்கிறது' என்கிறார் மனைவி. கணவரோ, `நான் குறட்டை விடவே இல்லை' என்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குறட்டைப் பிரச்னை விவாகரத்துவரை செல்கிறது. அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், நம் ஊரில்...?

குறட்டை
குறட்டை

குறட்டை என்பது தீர்வுகாண முடியாத நோயா?', `இல்லவே இல்லை... தீர்க்கக்கூடியதுதான்' என்கிறது மருத்துவம்.

32 வயதாகும் எனக்கு இவ்வளவு நாள் குறட்டை பிரச்னை வந்ததில்லை. கடந்த ஒரு மாதமாக தூங்கும்போது குறட்டை வருகிறது. இது எதனால்? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?' என்று #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் ரூபிணி என்ற வாசகர். அவரது கேள்வி மற்றும் சந்தேகத்துக்குப் பதிலளிக்கிறது இந்தக் கட்டுரை.

தூக்கம்
தூக்கம்

`குறட்டைப் பிரச்னை ஏற்படக் காரணம் என்ன, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்' என்று காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகரிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``குறட்டைப் பிரச்னை என்பது வயதானோருக்கு மட்டுமே வரும் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது இளம்வயதினருக்கும் வர வாய்ப்புள்ளது. தூக்கத்தின்போது சுவாசக்கோளாறு காரணமாக ஏற்படுவதே குறட்டை. மேலைநாடுகளைவிட நம் நாட்டில்தான் அதிக சதவிகிதம் பேர் குறட்டையால் பாதிக்கப்படுகின்றனர். குறட்டைவிடும் பலர் மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதுடன், `தான் குறட்டையே விடுவதில்லை' என்றும் மறுத்துப்பேசுவார்கள். குறட்டை விடுபவர்களின் தூக்கம் ஆரோக்கியமானது அல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.

குறட்டை எதனால் வருகிறது?

நாம் ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும் உள்ளே செல்லும் காற்று மூக்கு முதல் நுரையீரல் வரை பயணம் செய்கிறது. அந்தப் பயணத்தின்போது ஏற்படும் தடங்கல்தான் குறட்டையாக வெளிப்படுகிறது. நாம் தூங்கி ஓய்வெடுக்கும்போது தொண்டைத் தசைகளும் ஓய்வெடுக்கின்றன. அதனால் மூச்சுப்பாதையின் அளவு குறுகிவிடும். அப்போது தளர்வுநிலையில் உள்ள நாக்கும் உள்வாங்கி, காற்று செல்லும் பாதையை மேலும் குறைத்து குறட்டைச் சத்தமாக வெளிப்படும். உடல்பருமன், தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு, டான்சில், அடினாய்டு மற்றும் தைராய்டு பிரச்னைகள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சைனஸ் போன்றவை இதன் காரணிகளாகும்.

காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகர்
காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகர்

மூச்சுப்பாதை குறுகுவதால் பிராணவாயு குறைவாகவே உள்ளே செல்லும். இந்தக் குறையை சரிசெய்ய இதயம் மிகவேகமாகத் துடிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். குறட்டை விடுவதால் இந்தநிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

குறட்டையை தடுக்கும் வழிமுறைகள்!

  • படுத்துக்கொண்டு டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • உடற்பயிற்சிசெய்து உடலைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

  • சளித் தொந்தரவு, மூக்கடைப்பு இருந்தால் தூங்கச் செல்வதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் வேது (ஆவி) பிடிப்பது நல்லது.

  • உறங்கும்போது ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

  • இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

  • குறட்டையைத் தவிர்க்கும் மருத்துவ உபகரணமான `கன்டினியஸ் பாசிட்டிவ் ஏர்வே பிரஷர்' (Continuous positive Airway pressure - CPAC) என்ற கருவியை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

இவைதவிர, குறட்டைப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. எனவே, குறட்டைப் பிரச்னை நீடித்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி அவரது அறிவுரைப்படி செயல்பட்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். குறட்டையிலிருந்து நிரந்தரத் தீர்வு காண்பது சாத்தியமே'' என்கிறார் டாக்டர் எம்.கே.ராஜசேகர்.