Published:Updated:

How to: நுனிமுடிப் பிளவை சரிசெய்வது எப்படி? | How to strengthen hair split ends?

Hair
News
Hair ( Photo by Baylee Gramling on Unsplash )

சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது, தலைக்குக் குளிக்காமல் இருப்பது, அடிப்பகுதியை வெட்டாமல் இருப்பது, வெந்நீரில் தலைக்குக் குளிப்பது, தூசு, வெப்பத்தின் பாதிப்பு என இவையெல்லாம் கேசத்தின் அடிப்பகுதியில் பிளவு ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும்.

Published:Updated:

How to: நுனிமுடிப் பிளவை சரிசெய்வது எப்படி? | How to strengthen hair split ends?

சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது, தலைக்குக் குளிக்காமல் இருப்பது, அடிப்பகுதியை வெட்டாமல் இருப்பது, வெந்நீரில் தலைக்குக் குளிப்பது, தூசு, வெப்பத்தின் பாதிப்பு என இவையெல்லாம் கேசத்தின் அடிப்பகுதியில் பிளவு ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும்.

Hair
News
Hair ( Photo by Baylee Gramling on Unsplash )

பெண்களின் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று, கேசம். முடிகொட்டுவது, கேச வறட்சி போன்றவற்றின் வரிசையில் கேசத்தின் நுனிகளில் ஏற்படும் பிளவும் பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்னை. இதனைக் கிளை பிரிதல் என்றும் அழைப்பர். சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது, தலைக்குக் குளிக்காமல் இருப்பது, அடிப்பகுதியை வெட்டாமல் இருப்பது, வெந்நீரில் தலைக்குக் குளிப்பது, தூசு, வெப்பத்தின் பாதிப்பு என இவையெல்லாம் கேசத்தின் அடிப்பகுதியில் பிளவு ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும். இந்தப் பிரச்னையை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான வழிகள் இங்கே.

தேன்
தேன்

1.தேன்:

கேசப் பராமரிப்பு, சரும பராமரிப்பு என எந்தப் பராமரிப்பை மேற்கொள்வதாக இருந்தாலும், அதில் தேனுக்கென்று தனியிடம் உண்டு. அந்த அளவுக்குத் தேனின் நன்மைகள் ஏராளம். தேனை தண்ணீருடன் கலந்து, அதனுடன் தயிர் மற்றும் ஆலிவ் எண்ணைய் கலந்து, தேவைப்பட்டால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து ஒன்றாகக் கலந்து, அதை கேசத்தின் வேர்ப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை தடவவும். இந்த பேக் போட்டு 20 நிமிடங்களுக்குப் பின் கேசத்தை நன்றாகத் தேய்த்துக் குளிக்கவும். இதனை அடிக்கடி செய்து வர நுனியில் ஏற்பட்டுள்ள பிளவு சரியாகும்.

2. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயுடன் எந்தப் பொருளையும் சேர்க்காமல், கேசத்தில் நன்றாகத் தேய்க்கவும். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஊறவைத்து அலசவும். கேச வறட்சியால் ஏற்படும் நுனிப்பிளவுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

கற்றாழை
கற்றாழை

3. கற்றாழை:

உடலின் உள்ளும், வெளிப்புற சருமத்திற்கும் கற்றாழை தரும் நன்மைகள் பல. கேசத்துக்கும் அது பயளிக்கக்கூடியது. மூன்று காற்றாழை இலைகளை எடுத்து, மேல் தோல் நீக்கி, உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. இதை அப்படியே வேர்க்கால் முதல் நுனிவரை கேசத்தில் தடவி, 30, 40 நிமிடங்கள் வைத்திருந்து மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். கேசத்தின் ஈரப்பதத்தை மீட்டுத் தரும், நுனி பிரியாமல் தவிர்க்கும்.

4. பழுத்த பப்பாளி:

பப்பாளியில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் ஏ உள்ளது. இதை பேஸ்ட் ஆக அப்ளை செய்யும்போது உச்சந்தலை மற்றும், கேசத்தின் வேர்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது, கேசம் வளர்வதை ஊக்குவிக்கிறது. இதற்குத் தேவையான திக்கான பேஸ்ட் செய்வதற்கு ஒரு கனிந்த பப்பாளியுடன் தயிர் கலந்து, கேசம் முழுக்கத் தடவி 30 - 45 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன்பின் குளிர்ந்த நீரில் கேசத்தை அலசவும்.

பப்பாளி
பப்பாளி

இந்த வெளிப்புற செயல்முறைகளைப் பின்பற்றுவதுடன், நிறைய தண்ணீர் அருந்துவது, அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவி எடுத்துக்கொள்வது, சீரான இடைவெளியில் கேசத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொள்வது, வெயில் படாமல் கேசத்தை பார்த்துக்கொள்வது, தூய்மையான சீப்பு மற்றும் தரமான மைல்டு ஷாம்பூ பயன்படுத்துவது, வெந்நீரை கேசத்தை அலசப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது போன்றவையும் முக்கியம்.