Published:Updated:

How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter?

Skin Care
News
Skin Care

அதிக நேரம் குளிப்பது, மிகவும் சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். முகம் கழுவும்போது அதிக கெமிக்கல்ஸ் கொண்ட சோப், ஃபேஸ்வாஷ் தவிர்க்கவும்; சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை இவை கிடைக்காமல் செய்துவிடலாம்.

Published:Updated:

How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter?

அதிக நேரம் குளிப்பது, மிகவும் சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். முகம் கழுவும்போது அதிக கெமிக்கல்ஸ் கொண்ட சோப், ஃபேஸ்வாஷ் தவிர்க்கவும்; சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை இவை கிடைக்காமல் செய்துவிடலாம்.

Skin Care
News
Skin Care

குளிர்காலம் என்றாலே இயற்கையாகவே உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதிலும் குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள், விரிசல்கள், இறந்த செல்கள் வெளியேறாமல் இருப்பது எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் எப்படியான சருமப் பராமரிப்பை மேற்கொள்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

சரும வகையைக் கண்டறியுங்கள்

முதலில், உங்களுடையது எந்த வகையான சருமம் என்பதைக் கண்டறியுங்கள். எண்ணெய்ப்பசை சருமமா, வறண்ட சருமமா, நார்மல் சருமமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு சருமப் பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் கிரீஸ் தன்மை இருக்கும் மாய்ஸ்ச்சரைசர்களைத் தவிர்த்து, முகத்தில் எப்போதும் ஈரப்பதம் இருப்பது போலான, இயற்கையான லோஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.

சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்பு

தினசரி பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளவும்

காலநிலைக்கு ஏற்ப சருமப் பராமரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்துக்கு பயன்படுத்தும் தயாரிப்புகளைக் குளிர்காலத்திலும் பயன்படுத்துவதா அல்லது வேறு பொருள்களைப் பயன்படுத்துவதா என்று சரும நல ஆலோசகரிடம் வழிகாட்டல் பெறலாம்.

இரவுநேர பராமரிப்பு

பகல் நேரங்களில் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் இரவு நேரமும் அதை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதைப் போன்ற சரும தயாரிப்புகளை இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.

அடிக்கடி சோப் வேண்டாமே

குளிர்காலத்தில் சோப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டாம்; இதனால் இயற்கையாக சருமத்துக்குக் கிடைக்கக்கூடிய ஈரப்பதம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சருமம் வறண்டுவிடக்கூடும்.

சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்பு
pixabay

குளிப்பதில் கவனம்

அதிக நேரம் குளிப்பது, சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். குளிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் 5 - 10 நிமிடங்கள் வரை மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவுகள்

தேவைக்கேற்ப நீர் நிறைய அருந்தவும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு சத்து, ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.

இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரித்து, உடல்நலத்தைப் பேணி காத்துக்கொள்ளலாம்.