Published:Updated:

How to series: ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது? | How to eat Flax seeds to lose body weight?

Flax seeds
News
Flax seeds ( Pixabay )

ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதனால் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) குறையும். மேலும் இதில் உள்ள உயர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை (ட்ரைகிளிசரைடுகள்) குறைக்க உதவுகின்றன.

Published:Updated:

How to series: ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது? | How to eat Flax seeds to lose body weight?

ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதனால் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) குறையும். மேலும் இதில் உள்ள உயர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை (ட்ரைகிளிசரைடுகள்) குறைக்க உதவுகின்றன.

Flax seeds
News
Flax seeds ( Pixabay )

ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flaxseeds, நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துகளை உள்ளடக்கிய பெரும் மருந்தாகவும், எடை குறைப்பு மற்றும் கேச வளர்ச்சிக்கு உதவக்கூடிய அருமருந்தாகவும் பலராலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல உணவு நிபுணர்களும் உடலின் பல பிரச்னைகளுக்கும், தேவையான ஊட்டச்சத்திற்கும் பரிந்துரைக்கக்கூடிய உணவுப் பொருளில் ஆளி விதைகளுக்கும் இடம் உண்டு. இப்படி பல பயன்களை உடலுக்குக் கொடுக்கக்கூடிய ஆளி விதைகள் பற்றி அறிந்தவர்கள், தங்கள் உணவில் அதையும் தவறாது சேர்த்துக்கொள்கின்றனர்.

Flax seeds
Flax seeds
Pixabay

ஆளி விதைகள் என்றால் என்ன?

* ஆளி விதைகள் பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடிய விதைகள். மிகவும் கடினமாகவும், மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும். இந்த விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், இல்லையென்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே, பெரும்பாலும் ஊறவைத்தோ, அல்லது அரைத்துப் பொடியாகவோ உண்ணப்படுகிறது.

* ஆளி விதைகளை மருத்துவர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின் கீழே எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஆளிவிதை பொடியை உட்கொள்ளவே பரிந்துரைக்கப்படும்.

ஆளி விதையின் நன்மைகள்

* ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதனால் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) குறையும். மேலும் இதில் உள்ள உயர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை (ட்ரைகிளிசரைடுகள்) குறைக்க உதவுகின்றன.

* உடலில் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது. கூடவே உயர் ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.

* ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசியை அடக்கி, நீண்ட நேரம் நிறைவாக உணர உதவுகிறது. இதன்மூலம் நேரடியாக உடல் எடை குறையாது என்றாலும், மறைமுகமாக உடல் எடையைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

* பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. ஆளிவிதைகள் கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Flax seeds
Flax seeds
Actress Disco Shanthi-s Untold painful story

* ஆளி விதைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை. மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் தொடர்பான அசௌகரியத்தை சமாளிக்கவும் பெண்களுக்குக் கைக்கொடுக்கிறது. கேசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, தினமும் இந்த ஆளி விதையைப் பயன்படுத்தும் பொது முடி கொட்டுதல் பிரச்னை சரிசெய்யப்படுகிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

ஆளி விதைகளை பொடிக்காமல், அரைக்காமல் முழுதாக அப்படியே சாப்பிடும் பட்சத்தில் அவற்றை முழுமையாக மென்று சாப்பிட முடியாது. அப்படி முழுமையாக அரைத்து சாப்பிடவில்லை என்றால் ஆளி விதையின் பலன்கள் கிடைக்காது என்பதால் பெரும்பாலும், அரைத்தோ, ஊறவைத்தோதான் உண்ண வேண்டும்.

ஆளி எண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம். ஆனால் அதிகமாக சூடுபடுத்தக் கூடாது என்பதால் சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

Flax seeds
Flax seeds
Photo by Vie Studio from Pexels

பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொண்ட ஆளிவிதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்தப் பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிதான, அதே நேரம் உடலுக்குத் தேவையான நார்சத்துகளுடன், பல சத்துகளும் ஆளி விதையில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில், மிகச் சிறிய அளவே தின உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.