Published:Updated:

How to series: காஜல் மூலம் கண்களை அழகாகக் காட்டுவது எப்படி? | How to use kajal?

Kajal
News
Kajal

பெண்களுக்கு முகத்தை அழகாக்கிக் கொள்வத்தைக் காட்டிலும் கண்ணை அழகாகக் காட்டுவதில் ஆர்வம் அதிகம். அதற்கு சிரத்தையும் அதிகம் தேவைப்படும் என்று பலர் நினைப்பர். ஆனால், காஜல் போதும் கண்களை அழகாக்க!

Published:Updated:

How to series: காஜல் மூலம் கண்களை அழகாகக் காட்டுவது எப்படி? | How to use kajal?

பெண்களுக்கு முகத்தை அழகாக்கிக் கொள்வத்தைக் காட்டிலும் கண்ணை அழகாகக் காட்டுவதில் ஆர்வம் அதிகம். அதற்கு சிரத்தையும் அதிகம் தேவைப்படும் என்று பலர் நினைப்பர். ஆனால், காஜல் போதும் கண்களை அழகாக்க!

Kajal
News
Kajal

அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கண்ணை அழகாக்குவதற்கு பெரும் மெனக்கெடல்கள் தேவை, அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் ரொம்பவே எளிதாக, சில நிமிடங்களிலேயே கண்களை அழகாக்குவதற்கான டிப்ஸ்களை கொடுக்கிறார், பி3 பிரைடல் ஸ்டுடியோவின் கார்த்திகா ஷ்யாம்.

கார்த்திகா ஷ்யாம்
கார்த்திகா ஷ்யாம்

டிப்ஸ் 1

``நம்மில் பெரும்பாலானோருக்கு `ஐ மேக்கப்' பண்ணுவதற்கு ஆசை இருந்தாலும், ஒரு விங் லைனர் கூட போட முடிவதில்லை. அவசர அவசரமாகப் போடும்போது ஒரு பக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சிறிதாகவும், அல்லது கோணல் மாணலாகவும் போய்விடும். அப்படி நேரத்தை சேமிக்க விரும்புவர்கள், அல்லது ரொம்பவே அழகாக வேண்டும் என்பவர்கள், தற்போது கடைகளில் கிடைக்கும் விங்கிற்கான ஸ்டாம்ப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். இந்த ஸ்டாம்பை கண்ணை மூடவைத்து கண்களில் ஓரத்தில் வைப்பதன் மூலம் அழகான வடிவத்தை கொடுக்கும். பின் அதனை கவர் செய்வது போன்று ஐ லைனர் பயன்படுத்தினால் கண்கள் ரொம்பவே அழகாகத் தெரியும்.

டிப்ஸ் 2:

கண்ணை அழகாக்கும் மற்றுமொரு முக்கியமான பொருள், செயற்கை கண் இமைகள் (eye lashes). இதனை பயன்படுத்தும் முன் அவரவரின் கண்ணின் இமை அளவிற்கு ஏற்றவாறு இந்த ஐ லேஷஸை வெட்டி வைக்க வேண்டும்.முக்கியமாக, வெட்டும் போது வெளிப்புறத்தில்தான் வெட்ட வேண்டும். பின் முழுதாக கண்ணை மூடாமல், லேஷஸ் ஒட்டுவதற்கு என்றே இருக்கும் கம் கொண்டு சில நொடிகளில் கண்ணில் பொருத்தவேண்டும். சரியாகப் பொருத்தினால், இதுவே கண்ணை மிக அழகாக்கி காட்டும்.

டிப்ஸ் 3:

காஜல் போடுவதிலும் சில வழிகளைப் பின்பற்றினால், காஜல் போடுவதால், சிலருக்கு ஏற்கெனவே சிறியதாக இருக்கும் கண்கள் மேலும் சிறியதாகிவிடுமோ என்ற கவலை இல்லாமல் கான்ஃபிடன்ட் உடன் பயன்படுத்தலாம். அதற்கு, முதலில் ஜெல் ஐ லைனர் எடுத்துக்கொண்டு, அதில் பிரெஷை பயன்படுத்தாமல், பிரேஷின் பின்புறத்தை பயன்படுத்தி காஜல் இட வேண்டும். இதனால் காஜலின் ஃபினிஷிங் நன்றாக வரும். பொதுவாக நார்மலான பிரெஷ் கொண்டு காஜல் இடும்போது, கண்களில் கண்ணீர் வரும், எரிச்சல் ஏற்படும். ஆனால் இப்படிச் செய்யும்போது எரிச்சல் ஏற்படாது.

கண்களிளும் கண்ணீர் வராது. கூடவே காஜலைப் பயன்படுத்தும் போது, வெள்ளை நிலர் காஜலையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது சிறியதாக இருக்கும் கண்களைக் கூடப் பெரிதாக காட்டும்'' என்றார்.