Published:Updated:

How to: முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி? | How to use multani mitti?

multani mitti
News
multani mitti ( Photo: Vikatan )

வீட்டிலேயே மிக எளிதான முறையில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக்குவதற்கான வழிமுறைகள் இங்கே...

Published:Updated:

How to: முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி? | How to use multani mitti?

வீட்டிலேயே மிக எளிதான முறையில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக்குவதற்கான வழிமுறைகள் இங்கே...

multani mitti
News
multani mitti ( Photo: Vikatan )

முகத்தின் அழகிற்கு நாம் உபயோகிக்கும் பொருள்களில் முல்தானி மெட்டிக்குத் தனி இடம் உள்ளது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடும், செயல்முறையும் தனித்துவமானது. வீட்டிலேயே மிக எளிதான முறையில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக்குவதற்கான வழிமுறைகள் இங்கே...

Multani mitti
Multani mitti
Photo: Vikatan

1. முகப் பொலிவுக்கு...

முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை

வேப்பிலை எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்துவதுடன் வலுவான நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது, பாக்டீரியாவை அகற்றுவதுடன் சருமம் மிகவும் பிரகாசமாக இருப்பதற்கு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

- 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி

- 1 டீஸ்பூன் வேப்பம்பூ பொடி

- 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

- அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு

மேலே கூறிய பொருள்களை பேஸ்ட் போல கலக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின் தண்ணீர் கொண்டு கழுவவும். வாரம் இருமுறை இதனை முகத்தில் அப்ளை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

2. முகப் பருக்களுக்கு...

முல்தானி மெட்டி மற்றும் சந்தனம்

முகத்தில் உள்ள பருக்கள் குறைவதற்கும் அதனால் ஏற்படும் வடுக்களைக் குறைப்பதற்கும் சந்தனம் உதவும்.

பயன்படுத்தும் முறை:

- 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி

- 2 டீஸ்பூன் சந்தன பவுடர்

- சிறிது ரோஸ் வாட்டர்

மூன்று பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இந்தக் கலவையைத் தடவிய பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். பின் ஏதேனும் ஒரு மாஸ்ச்சரைசர் அப்ளை செய்து கொள்ளவும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர வேண்டும்.

multani mitti
multani mitti
Photo: Vikatan

3. எண்ணெய்ப் பசை சருமத்திற்கு...

முல்தானி மெட்டி மற்றும் முட்டை:

முட்டை, எண்ணெய் சருமத்திற்கு நல்லது. எண்ணெய் சுரப்பை சீராக்கவும், துளைகளை இறுக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

- ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி

- ஒரு முட்டையின் வெள்ளைக்கரு

இரண்டையும் நன்றாக அடித்துக் கலக்கிக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வரலாம்.

இதுபோல கற்றாழை, எலுமிச்சை சாறு என முல்தானி மெட்டியுடன் சேர்த்துக் கலந்து முகத்தில் அப்ளை செய்து வரலாம்.

முல்தானி மெட்டியின் நன்மைகள்:

- முகப்பருவைக்களைக் கட்டுப்படுத்தும் இதில் மெக்னீசியம் குளோரைடு நிறைந்துள்ளதால், முகப்பரு மற்றும் வெடிப்புகளை சரி செய்வதில் சிறந்ததாகும்.

- முல்தானி மெட்டி சிறந்த கிருமிநாசினி. இதில் மினரல்கள் அதிகம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கும்.

- முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதால் முகம் பொலிவாகக் காணப்படும்.

- முகப்பருவினால் ஏற்படக்கூடிய வடுக்கள் மற்றும் அடையாளங்களை மறைக்க உதவும்.

- இறந்த சரும செல்களை அகற்றி, புதிய சரும செல்கள் வெளிப்பட உதவும்.