Published:Updated:

How to: கர்ப்ப பரிசோதனை கிட்; பயன்படுத்துவது எப்படி? I How to use pregnancy test kit?

pregnancy
News
pregnancy

அதிகாலை நேரத்தில் வெளியேறும் முதல் சிறுநீரில் கர்ப்பகால ஹார்மோனான HCG ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும்; மற்ற நேரங்களில் தண்ணீர் குடிக்கும்போது அது நீர்த்துப்போகும். எனவே, அதிகாலை சிறுநீரை பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

Published:Updated:

How to: கர்ப்ப பரிசோதனை கிட்; பயன்படுத்துவது எப்படி? I How to use pregnancy test kit?

அதிகாலை நேரத்தில் வெளியேறும் முதல் சிறுநீரில் கர்ப்பகால ஹார்மோனான HCG ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும்; மற்ற நேரங்களில் தண்ணீர் குடிக்கும்போது அது நீர்த்துப்போகும். எனவே, அதிகாலை சிறுநீரை பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

pregnancy
News
pregnancy

கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள், கருவுற்ற ஆரம்ப நாள்களில் தாங்கள் கருவுற்றிருக்கோமோ என்பதை வீட்டிலேயே அறிந்து கொள்ளும் வகையில் pregnancy test kit-கள் கிடைக்கின்றன. மிக விரைவாக, எளிதாக கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், இதை பல பெண்களும் பயன்படுத்துகின்றனர். என்றாலும் சிலருக்கு, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், மாதவிடாய் மிஸ் ஆகி எத்தனை நாள்கள் கழித்து பயன்படுத்த வேண்டும், சோதனையை நாளின் எந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த சந்தேகங்கள் இருக்கும். அவற்றுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.

Pregnancy
Pregnancy

எப்படி பயன்படுத்துவது?

* காலையில் எழுந்ததும் வெளியேற்றும் முதல் சிறுநீரை ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக் கொள்ளவும்.

* pregnanacy test kit-ல், சிறுநீரை விடுவதற்கு என்று உள்ள பகுதியில் 3 சொட்டுகள் விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பின் ரிசல்ட் தெரியவரும்.

* pregnanacy test kit-ல் தெரியவரும் கோடுகளின் அடிப்படையில், கர்ப்பமா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். கிட்டில் உள்ள டிஸ்பிளே பகுதியில் பிங்க் நிறத்தில் இரண்டு கோடுகள் நல்ல அடர் நிறத்தில் (டார்க்) தெரிந்தால் பாசிட்டிவ் என்று அர்த்தம். ஒரு கோடு மட்டும் தெரிந்தால் நெகட்டிவ்.

* ஒருவேளை, இரண்டு கோடுகளில் ஒரு கோடு அடர் பிங்க் நிறத்திலும், மற்றொரு கோடு மெலிதாகவும் தெரிந்தால், சரியான ரிசல்ட் காட்டப்படவில்லை என்று அர்த்தம். கர்ப்பகால ஹார்மோனான ஹெ.சி.ஜி (HCG - Human chorionic gonadotropin) ஆரம்ப நாள்களில் குறைவாக இருக்கலாம். அதன் காரணமாக ரிசல்ட் இப்படி வரலாம். எனவே, மீண்டும் சில நாள்கள் கழித்து டெஸ்ட்டை எடுக்க, கர்ப்பம் என்றால் இரண்டு கோடுகளும் அடர் பிங்க் நிறத்தில் தெரியும்.

Pregnancy
Pregnancy
Photo by freestocks.org from Pexels

எந்த நேரத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்?

* மாதவிடாய் சுழற்சி ரெகுலராக இருப்பவர்கள், கடைசி மாதவிடாய் முடிந்த 35 நாள்களில் இருந்து 40 நாள்களுக்குப் பின் pregnancy kit கொண்டு பரிசோதனை செய்து பார்க்கலாம்.

* ரிசல்ட் சரியாக இல்லை என்றால், 7 - 10 நாள்கள் கழித்து மறுபடியும் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

* அதிகாலை நேரத்தில் வெளியேறும் முதல் சிறுநீரில் HCG ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும்; மற்ற நேரங்களில் தண்ணீர் குடிக்கும்போது அது நீர்த்துப்போகும். எனவே, அதிகாலை சிறுநீரையை பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இது ஆரம்பகால பரிசோதனை மட்டுமே. ஒருவேளை கர்ப்பம் உறுதியானால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளின் அடிப்படையில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.