Published:Updated:

How to: அரிசி ஊறவைத்த நீரை முகம், முடிக்கு பயன்படுத்துவது எப்படி? | How to use rice water for hair?

Rice Water Face pack
News
Rice Water Face pack

வெளியில் செல்வது, மாசுபடுவது எனப் பல காரணங்களால் முகத்தில் உண்டாகும் கருமையை நீக்க, செயற்கை முறையில் பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிய முறையில் சரும கருமையை நீக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றில் நல்ல ரிசல்ட் கொடுப்பது... அரிசி ஊறவைத்த நீர்.

Published:Updated:

How to: அரிசி ஊறவைத்த நீரை முகம், முடிக்கு பயன்படுத்துவது எப்படி? | How to use rice water for hair?

வெளியில் செல்வது, மாசுபடுவது எனப் பல காரணங்களால் முகத்தில் உண்டாகும் கருமையை நீக்க, செயற்கை முறையில் பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிய முறையில் சரும கருமையை நீக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றில் நல்ல ரிசல்ட் கொடுப்பது... அரிசி ஊறவைத்த நீர்.

Rice Water Face pack
News
Rice Water Face pack

வெளியில் செல்வது, மாசு படுவது எனப் பல காரணங்களால் முகத்தில் உண்டாகும் கருமையை நீக்க, செயற்கை முறையில் பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிய முறையில் சரும கருமையை நீக்கப் பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது, அரிசி கழுவிய நீர்!

``ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல வருடங்களாக `யூசுரு' என்ற பெயரில் அரிசி கழுவிய நீரை ஆரோக்கியத்திற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அரிசியை ஓர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கும் போது பல நன்மை தரும் பாக்டீரியாக்கள் அந்த நீரில் உண்டாகும். அதை சருமத்துக்குப் பயன்படுத்தும்போது முகம் பொலிவடையும்; தலைக்குப் பயன்படுத்தும் போது பொடுகுப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்'' என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, அரிசி கழுவிய நீரை முகம், கேசப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் வழிகளை விளக்கினார்.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

சருமத்துக்கு...

தேவையான பொருள்கள்:

* அரிசி ஊறவைத்த நீர் (இரவு முழுவதும் ஊற வைத்திருக்கு வேண்டும்)
* சோளமாவு (முகத்தில் பேக் அப்ளை செய்ய தேவையான அளவு)
* ரோஸ்வாட்டர்

``சோளமாவுடன், அரிசி ஊறவைத்த நீர் சிறிதளவு, ரோஸ்வாட்டர் சிறிதளவு சேர்த்து, சிறிது கெட்டியான பேஸ்ட் ஆகக் கலந்து வைத்துக்கொள்ளவும். பின், அரிசி ஊறிய நீரை சிறிது பஞ்சில் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும் (பேஸ்ட் அப்ளை செய்யாமலும் இதனை மட்டும்கூட தினமும் நாம் செய்யலாம்). தொடர்ந்து, கலந்து வைத்துள்ள பேஸ்ட் கலவையை எடுத்து முகத்தில் கருமை உள்ள இடங்களில், அல்லது முகம் முழுவதும் அப்ளை செய்து, 15 முதல் 30 நிமிடங்கள் வரை விடவும். தேவைப்பட்டால் கழுத்திலும் அப்ளை செய்து கொள்ளலாம். 30 நிமிடங்களுக்குப் பின் துணியால் துடைத்து எடுத்துவிடவும். பின்னர் முகத்தை கழுவி விடலாம்.

சருமக் கருமையை போக்குவதில் அரிசி ஊறிய நீர் பேக் சிறந்த ரிசல்ட் தரும் என்பதால், தினமும் கூட இதை நாம் செய்து வரலாம்.

தலைக்கு...

அரிசி ஊறிய நீரை சிறிதளவு எடுத்து, அதில் வைட்டமின் ஈ மாத்திரையை சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை ஸ்பிரே போல கேசத்தில் பயன்படுத்தலாம். சேதமடைந்த கேசம் மேலும் சேதம் அடையாமல் இது பராமரிக்கும்.

இந்தக் கலவையை வெளியில் செல்லும்போது ஸ்பிரே போன்று முகத்திலும், சீரம் போன்று தலையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் முகம் வெளிப்புற மாசுகளில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

ஊறவைக்கப்படும் அரிசி புழுங்கல் அரிசியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பாசுமதி அரிசி ஊற வைத்த நீரைக் கூடப் பயன்படுத்தலாம். கேசத்துக்குப் பயன்படுத்தும்போது நிச்சயமாக வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சிலருக்கு தலைமுடி வறண்டு போக வாய்ப்புள்ளது'' என்றார்.