Published:Updated:

How to series: டீ ட்ரீ ஆயில் - முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? | How to use tea tree oil?

How to use tea tree oil?
News
How to use tea tree oil?

சின்னச் சின்னதாக இருக்கும் கொப்புளங்கள் போன்றவற்றை நீக்க இதைப் பயன்படுத்தலாம். தலையில் ஏற்படும் பொடுகுப் பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது. ஆனால், ட்ரீ டீ ஆயிலை நேரடியாகவோ, அதிகமாகவோ பயன்படுத்திவிடக் கூடாது. பின்வரும் வழிமுறைகளிலேயே பின்பற்ற வேண்டும்.

Published:Updated:

How to series: டீ ட்ரீ ஆயில் - முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? | How to use tea tree oil?

சின்னச் சின்னதாக இருக்கும் கொப்புளங்கள் போன்றவற்றை நீக்க இதைப் பயன்படுத்தலாம். தலையில் ஏற்படும் பொடுகுப் பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது. ஆனால், ட்ரீ டீ ஆயிலை நேரடியாகவோ, அதிகமாகவோ பயன்படுத்திவிடக் கூடாது. பின்வரும் வழிமுறைகளிலேயே பின்பற்ற வேண்டும்.

How to use tea tree oil?
News
How to use tea tree oil?

பெண்களை வாட்டும் பிரச்னைகளில் முக்கியமானது சருமப் பிரச்னை. இதற்கெனப் பல தீர்வுகள் இருந்தாலும், தற்போது மற்றுமொரு தீர்வாகக் கூறப்படுவது டீ ட்ரீ ஆயில். அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பகிர்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

``உடலுக்கு ரொம்பவே பயனளிக்கக்கூடிய அரோமா தெரபியில், அத்தியாவசிய எண்ணெய்கள் (Essential oils, கேரியர் எண்ணெய்கள் (Carrier oils) என இரண்டு வகை உள்ளது. அதில் அத்தியாவசிய எண்ணெய்களில் முக்கிய இடம் டீ ட்ரீ ஆயிலுக்கு உள்ளது.

பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா
பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா

பல நூறு வருடங்களாகப் பயன்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

பொதுவாக, முகத்தில் ஏற்படும் பரு, அதனால் ஏற்படும் தழும்புகள், இரண்டு பக்க கன்னங்கள் மற்றும் மூக்கின் மேல் சின்னச் சின்னதாக இருக்கும் கொப்புளங்கள் போன்றவற்றை நீக்க இதைப் பயன்படுத்தலாம். தலையில் ஏற்படும் பொடுகுப் பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது. ஆனால், ட்ரீ டீ ஆயிலை நேரடியாகவோ, அதிகமாகவோ பயன்படுத்திவிடக் கூடாது. பின்வரும் வழிமுறைகளிலேயே பின்பற்ற வேண்டும்.

முகத்துக்கு...

சருமப் பிரச்னைக்கு ட்ரீ டீ ஆயிலைப் பயன்படுத்தும்போது அந்தச் செய்முறையை இரண்டாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். முதலில் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். பிறகு, முல்தானி மட்டி, தயிர் மற்றும் 2-3 சொட்டு ட்ரீ டீ ஆயில் கலந்த பேக்கைப் பயன்படுத்த வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

1. எண்ணெயை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் சுத்தமான பாலை பஞ்சில் எடுத்து முகத்தில் தோய்த்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தாலும் சுத்தமாவதற்கு வாய்ப்பு உள்ளது.

 tea tree oil
tea tree oil

2. பாலைக் கொண்டு சுத்தம் செய்த பின், ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை (extra virgin coconut oil) எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அதிகபட்சமாக 3 சொட்டுகள் மட்டும் ட்ரீ டீ ஆயிலை இட வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பாலால் சுத்தம் செய்த முகத்தில் அப்ளை செய்திட வேண்டும். ரொம்ப தேய்க்க வேண்டியது இல்லை, அப்ளை செய்தால் மட்டும் போதும். இதை 30 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும்.

3. அடுத்ததாக இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தயிர் சேர்த்து பேக்காகக் கலந்து, அதனுடன் 3 சொட்டுகள் ட்ரீ டீ ஆயில் கலந்து, முகத்தில் அப்ளை செய்திட வேண்டும்.

தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் முகத்துக்கு மிக நல்லது. ட்ரீ டீ ஆயிலில் பல சரும பலன்கள் (antimicrobial, antiseptic) உள்ளதால், சருமத்துக்கு மிகவும் உகந்தது. இந்த பேக்கை இரண்டு முறை (அப்ளை செய்யும்போது முகத்தில் எந்த எரிச்சலும் இல்லை என்றால் மட்டும்) அப்ளை செய்திட வேண்டும்.

4. 30 நிமிடங்கள் கழித்து முகத்தை ஈரத் துணி கொண்டு துடைக்க வேண்டும். ஒருமுறை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர முடியும். ஆனால், தினமும் செய்திடக் கூடாது, வாரத்துக்கு ஒரு முறை என்றுதான் செய்ய வேண்டும்.

5. சருமத்துக்கு ட்ரீ டீ ஆயில் எவ்வளவு நல்லதோ, அதே போன்று கேசத்துக்கும் மிக நல்லது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 சொட்டு ட்ரீ டீ எண்ணெயைக் கலந்து, வாசனைக்காக இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணையை அப்படியே கூலாக (சூடு படுத்தவே கூடாது) கலந்து தலையில் அப்ளை செய்திட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு, சாஃப்ட் ஷாம்பூவுடன் ஒரு சொட்டு ட்ரீ டீ ஆயில் கலந்து தலையை அலசலாம். இதன் மூலம் பொடுகுத் தொல்லை வெகுவாக மட்டுப்படுத்தப்படும்'' என்றார்.