Published:Updated:

How to series: வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி? | How to make hair removal wax at home?

Waxing (Representational Image
News
Waxing (Representational Image ( Photo by Arina Krasnikova from Pexels )

தயாரித்த வேக்ஸை நன்றாக உருக்கி, ஒரு சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் தேவைப்படும்போது டபுள் பாய்லர் முறையில் சூடுபடுத்திப் பயன்படுத்தலாம்.

Published:Updated:

How to series: வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி? | How to make hair removal wax at home?

தயாரித்த வேக்ஸை நன்றாக உருக்கி, ஒரு சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் தேவைப்படும்போது டபுள் பாய்லர் முறையில் சூடுபடுத்திப் பயன்படுத்தலாம்.

Waxing (Representational Image
News
Waxing (Representational Image ( Photo by Arina Krasnikova from Pexels )

``உடலில் இருக்கும் தேவையில்லாத ரோமங்களை நீக்குவதற்கான வழிகளில் ஒன்றான வேக்ஸிங், பல பெண்களுக்கும் விருப்பமான தேர்வாக உள்ளது.

பார்லரில் மட்டுமே வேக்ஸிங் செய்ய முடியும் எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், வீட்டிலேயே எளிய முறையில் வேக்ஸிங் செய்து தேவையில்லாத ரோமங்களை நீக்கலாம்'' எனக் கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, அந்த வேக்ஸ் தயாரிப்பதற்கான செயல்முறைகளைக் கூறுகிறார்.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

தேவையான பொருள்கள்

எலுமிச்சை பழம் - 1/4 கப்

சர்க்கரை - 1/4 கப்

தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும் (எலுமிச்சை விதைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிடவும்).

அடுப்பு சிறிய தீயில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். கலவையை நன்றாகக் கலந்துகொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கலவையின் நிறம் மாற ஆரம்பிக்கும்.

அதன் பின் அடுப்பின் தீயைக் கொஞ்சம் அதிகரித்து, கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இப்படி செய்துகொண்டே இருக்கும்போது நல்ல அடர் பழுப்பு நிறத்துக்குக் கலவை வரும். அப்போது அதிலிருந்து இரண்டு சொட்டுகள் எடுத்து தண்ணீரில் விட்டுப் பார்க்கவும். பரவிவிடாமல், நீரின் அடியில் சென்று அந்த சொட்டுகள் சேர்ந்தால் சரியான பதத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.

எளிமையான செயல்முறையில் வேக்ஸ் ரெடி. அடுப்பை அணைத்துவிட்டு, கூர்மையற்ற கத்தி அல்லது ஸ்பூனை பயன்படுத்தி அதை எடுத்து, பொறுக்கும் சூட்டில் பயன்படுத்தலாம்.

வேக்ஸை பயன்படுத்தி ரோமங்களை நீக்கிய பின்னர், அந்த சருமம் சிறிது சிவப்பாக இருக்கும், பயப்படத் தேவையில்லை. சிறிது ஐஸ்கட்டி வைத்தால் சரியாகிவிடும்.

தயாரித்த வேக்ஸை நன்றாக உருக்கி, ஒரு சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் தேவைப்படும்போது டபுள் பாய்லர் முறையில் சூடுபடுத்தி பயன்படுத்தலாம் (நேரடியாகச் சூடுபடுத்தினால் வேக்ஸ் கடினமாக மாற வாய்ப்புள்ளது).

உடலில் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

கை, கால், அக்குள் பகுதி மட்டுமல்லாது மேலுதடு, நெற்றி, தாடையிலும் ரோமம் நீக்க இந்த வேக்ஸைப் பயன்படுத்தலாம்.