Published:Updated:

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது
நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

டெஸ்ட் எடுத்துப்பார்த்தால் சுகர் அளவு 200னு காட்டி அதிர்ச்சி கொடுக்கும். அன்னைலயிருந்து அவங்க வாழ்க்கையே டோட்டலா மாறிடும்... என்னவோ தன்னோட `குடி கெடுக்கவந்த ஜென்ம விரோதி' மாதிரி சர்க்கரையைப் பார்ப்பாங்க. சீனிவாசன்ற பேர் இருக்கறதாலயே வேங்கடாசலபதிய விட்டுட்டு சிவனைக் கும்புடப் போயிடுவாங்க. சாப்பிடுற சாப்பாட்டை தடாலடியா குறைச்சுடுவாங்க!

``ப்பத்தான 'அங்கிள்'னு கூப்பிடத் தொடங்குனானுங்க, அதுக்குள்ள நம்ம அக்கா மகளுக்குக் குழந்தை பிறந்திருச்சே, இனி நம்மள `தாத்தா'னு கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்களோ?' என்ற குழப்பம் உங்களுக்கு வந்துவிட்டால், கண்டிப்பாக நீங்க 40 வயதைத் தாண்டிட்டீங்கன்னு அடிச்சுச் சொல்லலாம்! இதுபோல 40+ க்கே உரிய சில குணாதிசயங்களைப் பார்க்கலாம்...

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

ஒண்ணு ரெண்டு முடி நரைக்கத் தொடங்குறப்ப பெருசா கண்டுக்க மாட்டோம். ஆனால் 40 வயசு வர்றப்ப எக்குத்தப்பா நரைக்கத் தொடங்கி, `இனியும் பொறுக்காதே மனோகரா, பொங்கியெழு'ன்னு மனசு பிராண்ட, தோல் அரிப்பு வராத பிராண்டு எதுன்னு தேடித்தேடி டை அடிக்கத் தொடங்கியிருப்பாங்க! `do or dye' சிச்சுவேஷன்தான்! வழுக்கை தலை ஏறிட்டேபோறதுக்கும் தீர்வு தேடுவாங்க... வசதிப்பட்டவங்க ஹேர் ப்ளான்டிங்ல பழைய ரஜினி மாதிரியோ புது அரவிந்த்சாமி மாதிரியோ மாறுவாங்க... இன்னொரு குரூப், இருக்குற கொஞ்ச முடியையும் ஃபுல் ஷேவ் பண்ணிட்டு `மொட்ட பாஸ்' ரஜினியாட்டம் தலைல தாளம் போடுவாங்க! போனாப் போகுதுன்னு குறுந்தாடி மட்டும் வெச்சுப்பாங்க! 

40 வயசைத்தொட்டதும் சுகர் படுத்துறபாடு செம காமெடி! எந்த வைத்தியமானாலும் மெடிக்கல் ஷாப்போடயே முடிச்சுக்கறவங்க, தவிர்க்கவே முடியாம என்றைக்காவது மருத்துவமனைக்குப் போயிருப்பாங்க. உடனே அந்த டாக்டர், சுகர் டெஸ்ட்டுக்கு எழுதிக்கொடுப்பாரு. டெஸ்ட் எடுத்துப்பார்த்தால் சுகர் அளவு 200னு காட்டி அதிர்ச்சி கொடுக்கும். அன்னைலயிருந்து அவங்க வாழ்க்கையே டோட்டலா மாறிடும்... என்னவோ தன்னோட `குடி கெடுக்கவந்த ஜென்ம விரோதி' மாதிரி சர்க்கரையைப் பார்ப்பாங்க. சீனிவாசன்ற பேர் இருக்கறதாலயே வேங்கடாசலபதிய விட்டுட்டு சிவனைக் கும்புடப் போயிடுவாங்க. சாப்பிடுற சாப்பாட்டை தடாலடியா குறைச்சுடுவாங்க! சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாரைப் பார்த்தாலும் நலம் விசாரிச்ச அடுத்த செகண்டே சுகர் விசாரிப்பையும் மறக்காமல் செய்து, தன்னைவிட அவங்களுக்கு சுகர் அளவு அதிகமா இருந்தால் மனசுக்குள்ளயே சந்தோசப்படுவாங்க!

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

காலைல எட்டு மணி வரைக்கும் தூங்கியே வாழ்க்கைய நடத்திட்டு இருந்த மனுஷன், சுகர் டெஸ்ட்டுக்கு அப்புறம்தான் விடிகாலைல எழுந்து வாக்கிங் கிளம்பி, `சூரியன் இம்புட்டு செவப்பாவா இருக்கும்?'னு ஆச்சர்யமா பாத்துட்டு சூரியனோட மறக்காம செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போடுவாரு! ஆனால் `சுகருக்காகத்தான் வாக்கிங் போறேன்'னு அடிச்சுக்கேட்டாலும் சொல்ல மாட்டாரு. 

40 வயசானதுமே மருத்துவக் குறிப்புகள்மேல ரொம்ப ஆர்வம் வந்துடும்... வாட்ஸ் அப்ல வர்ற மருத்துவக் குறிப்பு எல்லாத்தையும் ஒண்ணுவிடாம வாசிப்பாங்க! பொதுவா அந்த 40+ வயசுலதான் அலோபதி மருத்துவத்து மேல பயம் வந்திருக்கும். நல்லா இருந்த நம்மை நோயாளி ஆக்கப்பார்க்கறாங்களோன்னு அவநம்பிக்கையும் வந்திருக்கும். உடனே சித்த வைத்தியம்தான் சூப்பர் வைத்தியம்னு சொல்லிட்டு கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, ஆடாதொடா இலைன்னு தேடித்திரிவாங்க... பார்க்ல நாம உட்கார்ந்திருக்குறப்ப யாராவது தேடித் தேடி இலை பறிச்சுக்கிட்டு இருந்தால் அவரு கண்டிப்பா 40 வயதைத் தாண்டின ஆளாத்தான் இருப்பார்!

நாக்கு கேக்குதேன்னு கண்டகண்ட ஃபாஸ்ட் புட்ல ராத்திரி சாப்பிட்டுட்டு வந்து வீட்டுல படுப்பாங்க. கேஸ் ட்ரபுள் வந்து திடீர்னு நெஞ்சுல இல்லன்னா முதுகுல வலிக்கிற மாதிரி இருக்கும். அப்பதான் 'ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்'னு வாட்ஸ் அப்ல படிச்சது நினைவுக்கு வரும். உடனே பதறியடிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவாங்க. 24 மணி நேர ஆஸ்பத்திரியில தூங்கிட்டு இருக்குற நர்ஸ அடிச்சு எழுப்பி ஹார்ட்பீட் செக் பண்ணச் சொல்வாங்க. 'உங்களுக்கு கேஸ் டிரபுளாத்தான் இருக்கும்'னு டாக்டரே சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க!

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

போன வருஷம் வரைக்கும் ஃபேஸ்புக்ல காதல் கவிதையா எழுதிக் கலக்கிட்டு இருந்தவங்க, திடீர்னு அரசியல் பக்கம் திரும்பி பயங்கரமான ஆருடம் எல்லாம் சொல்வாங்க. 'எங்க வீட்டுல கொசுக்கடி அதிகமா இருக்கு, அதைக்கூட சரிபண்ண முடியாம என்னத்த ஆட்சி நடத்துறாய்ங்க!'ன்னு கொசுக்கடிக்காக ஆட்சியவே கலைக்கணும்கற ரேஞ்சுல பேசுவாங்க. 'ஸ்கூலா நடத்துறாய்ங்க, எதுக்கெடுத்தாலும் துட்டு புடுங்குறாய்ங்க!'ன்னு தொடங்கி, 'பப்ளிக்கா உக்காந்து கிஸ் அடிச்சுக்கிட்டிருக்காய்ங்க! இந்தக் கண்றாவிக்குக் காதல்னு வேற சொல்றாய்ங்க!' எனக் காதலையும் விட்டுவைக்காமல் காய்ச்சி எடுப்பார்கள். இப்படிப் பேசிப் பேசியே பிபி ஏறினால் கண்டிப்பா அவங்க 40 வயசைத் தாண்டுனவங்களாத்தான் இருப்பாங்க!

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

40 வயசைத் தாண்டுற சமயத்தில்தான் பெரும்பாலான வீடுகளில் பாகப்பிரிவினை நடக்கும். ``எங்க அம்மாவோட பித்தளை அண்டாவை மூத்தவ சுருட்டிக்கிட்டாளே!" என ஒரு அண்டாவுக்காக `முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக'  இருந்த குடும்பம், நவகிரகம் மாதிரி நாலு பக்கமாப் பார்த்து முறைச்சுக்கறதெல்லாம் இந்த 40 வயசைத் தாண்டுறப்பதான் நடக்கும். 'இனி உன் வீட்டு வாசப்படிய ஜென்மத்துக்கும் மிதிக்கமாட்டேன்!'னு சபதம் போட்டுட்டு, நல்லா கூடி விளையாடிட்டிருக்கும் வாண்டுகளையும் பிரிச்சு 'தரதரன்னு' இழுத்துட்டு போயிடுவாய்ங்க!

பல பேருக்கு 40 வயசுக்குமேலதான் ஆன்மிகம் தூக்கலா இருக்கும்! யாராவது ஒரு ஜோசியரைப்பற்றிப் புகழ்ந்து சொல்லிட்டா அவரைத் தேடிப்போயி ஜோசியம் கேட்பாங்க. ஜோசியம் பார்த்தும் பெருசா மாற்றம் இல்லைன்னா அடுத்த ஜோசியரை மாத்துவாங்க. ஆக, அவங்க வாழ்க்கையில மாற்றம் வருதோ இல்லையோ ஜோசியரை மட்டும் அடிக்கடி மாறிக்கிட்டே இருப்பாங்க! 

நரை முதல் சர்க்கரை வரை... 40 ப்ளஸ்களின் சுவாரஸ்ய வாழ்க்கை - ஒரு ஜாலி அனுபவம்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

`மழை நேரம், பால்கனி, காபி கோப்பை, இளையராஜா இசை'ன்னு உருகுறது அம்புட்டும் 40+ ஆட்களாத்தான் இருப்பாங்க! ஆனால் அதே இளையராஜா 'ராயல்டி' கேட்டால் ஃபேஸ்புக்ல கிழிச்சு தொங்க விடுறதும் இவங்கதான்! 

கவிதை எழுதினாலும் சரி, இன்னொருத்தர்கூட பேசுனாலும் சரி, நாஸ்டாலஜி விஷயங்கள் ரொம்ப தூக்கலா இருக்கும். 'நாங்கள்லாம் படிச்சப்ப...', 'நாங்கள்லாம் கல்யாணம் பண்ணுனப்ப...'ன்னு படக் படக்னு கடந்த காலத்துக்குப் போயிட்டு வர்றது இவங்களுக்கு கைவந்த கலை! 

ஆனா ஒண்ணு பாஸ்.. ஃபேஸ்புக்கையும் சரி, குடும்பத்தையும் சரி, பரபரப்பாக வச்சுக்கறது, பொறுப்பா அட்வைஸ் பண்றது, தாங்களும் பொறுப்பா நடந்துக்கறது... கடந்து வந்த அனுபவங்களை இளைஞர்கள்கிட்ட சொல்லி அவங்களை வழிப்படுத்தறதுன்னு, எல்லாமே 40 ப்ளஸ் ஹீரோக்கள்தான். இவங்க இல்லைன்னா  பல ‘பாய்ஸ்’கள்.. காணாமயே போயிருப்பாங்க!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு