Published:Updated:

டாக்டர் ஷர்மிகா ‘மொத்த’ வைத்தியசாலை: போகப் போக இப்படியெல்லாம் சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை!

டாக்டர் ஷர்மிகா

சோசியல் மீடியால என்ன பேசினா 'Followers' கிடைப்பாங்கனு ரத்தம், சதை, நாடி, நரம்பெல்லாம் தெரிஞ்ச ஒரு வெயிட்டு கையாலதான் இப்படி எல்லாம் பேச முடியும்.

டாக்டர் ஷர்மிகா ‘மொத்த’ வைத்தியசாலை: போகப் போக இப்படியெல்லாம் சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை!

சோசியல் மீடியால என்ன பேசினா 'Followers' கிடைப்பாங்கனு ரத்தம், சதை, நாடி, நரம்பெல்லாம் தெரிஞ்ச ஒரு வெயிட்டு கையாலதான் இப்படி எல்லாம் பேச முடியும்.

Published:Updated:
டாக்டர் ஷர்மிகா

‘நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், ஹோமியோபதி, அம்பிகாபதி, நேட்சுரோபதியோட சேர்த்து வாஸ்து, மனையடி சாஸ்திரம், கிளி ஜோசியமெல்லாம் பார்த்து எல்லாவிதமான விஷக்கடிகளுக்கும் தகுந்தமுறையில் இன்ஸ்டா ரீல்ஸில் மொத்த வைத்தியமும் பார்க்கப்படும்.’ இப்படி ஒரு போர்டு மட்டும்தான் மாட்டலயே தவிர மத்தபடி 2100ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறை சார்ந்த காமெடிகள் எல்லாம் பண்ணிட்டாங்க. டைம் மிஷின் காலத்து ஜோக்குகள்னு இந்தப் புத்தகக் காட்சில புத்தகமே கொண்டுவரலாம்.

“மேடம் நீங்க பல் டாக்டரா?”ன்னு கேள்வி கேட்டா, நான் ‘பல’ டாக்டர்ப்பா’னு சொல்லிப் பெருமப்படுற அளவுக்குப் பலவிதமான நோய்களுக்கும் குண்டக்க மண்டக்க சொல்லி டண்டனக்கா ஆகிட்டிருக்காங்க நம்ம மேடம்.
ஷர்மிகா சரண், டெய்சி சரண்
ஷர்மிகா சரண், டெய்சி சரண்

அவங்க பேசின சில தத்துபித்து தத்துவ மருத்துவமுறைகள்தான் லேட்டஸ்ட் வைரல். இந்த வைரல் எப்படி சாத்தியமாச்சுனு கேட்டா கொரோனா வைரஸ அழிக்க கொரோனா மாதிரியே இருக்கிற ரம்புட்டான் பழத்த சாப்பிடுங்கனு ஏதாச்சும் டிப்ஸ் கொடுப்பாங்க. அவ்வளவு சகஜமா சிரிச்சிக்கிட்டே பேசுற அழகே தனி.

“நம்மள விட பெரிய மிருகம் மாடு, அதைச் சாப்பிட்டா நம்ம உடம்பால செரிக்க முடியாது, ஏன்னா நம்ம DNA அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கு”னு அவங்க சொல்ல, 'மாட்டை யாரும் முழுசா முழுங்க மாட்டாங்க மேடம், அப்புறம் எதுக்காக DNA வரைக்கும் போயி அலசி ஆராய்ஞ்சாங்க தெரியல'ன்னு இங்க ஒரு பதில் வருது. அவங்க பேசுறது மாற்று மருத்துவமா மாட்டு மருத்துவமா ஒரே கன்ஃபியூஷன்ஸ்ப்பா...

‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு’ன்னு பேசினது சூர்யா. ‘ஒரேயொரு குலோப்ஜாமூன் சாப்பிட்டீங்கன்னா உடனே 3 கிலோ வெயிட் ஏறிடும்’னு பேசினது யார்யான்னு பாத்தா அதுவும் நம்ம டாக்டர் ஷர்மிகாதான்.

குழந்தை பெத்துக்க நல்லவனா இருந்தா போதும், எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்னு சொன்னதுல அந்த கடவுளே ஜெர்க் ஆகி 'wait... what?' அப்டின்னு கேட்ருப்பாரு.

கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்; நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிசாகும்னு இவங்க அடிச்சுவிட்ட அரிய தகவல்களை ஃபாலோ பண்ணிப் போனா,

டாக்டர் ஷர்மிகா
டாக்டர் ஷர்மிகா

* இருமல் சரியாக இஷ்ட தெய்வத்தக் கும்பிடு

* சளி பிடிச்சா சாணி தேய்ச்சிக் குளி

* சுகர் பிரச்னையா துர்க்கை அம்மனுக்கு விளக்குப் போட்டு வேப்பிலை சாப்பிடு

* காய்ச்சல் வந்தா காளகஸ்தி போயி மூணு வேலை பூஜை பண்ணு

* சீதபேதிக்கு சீனாவுக்கு ஆன்மிக சுற்றுலா போங்க

* இரும்புசத்துக்கு தோசை சாப்டாம தோசைக் கல்லயே சாப்டுங்க

இப்படியெல்லாம் இவங்க See more... லிஸ்ட் போட்டு என்ன சொன்னாலும் நாம ஆச்சரியப்படுறதுக்கில்ல. ‘என்ன வேணா நடக்கட்டும் நாங்க சந்தோசமா இருப்போம்’னு ஆர்மி ஆரம்பிச்ச இவங்க ரசிக நோயாளிகள் இருக்கிற வர இப்படி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கலாம். ஜாலியான ட்ரீட்மென்ட்டா இருக்கேனு வான்ட்டடா வண்டில வந்து ஏறின ரசிகர்களுக்காக ஃபேன்ஸ் மீட், ஆட்டோகிராப் மீட் இதெல்லாம் வைக்கிறதுல என்ன தப்புங்குறேன்? (பிரஸ் மீட் மட்டும் வேணாம்ங்க!)

“ஒரு ராணுவ வீரன் மாதிரிதான் டாக்டரும் நாட்டுக்கு சேவை பண்றோம். அதனால யாரும் கலாய்க்காதீங்க”னு டாக்டர் வருத்தப்படுறாங்க. ஆனா அவங்கள அவங்களே கலாய்ச்சுக்குறது அவங்களுக்கே தெரியல. ‘அந்த அப்பாவியான முகத்தப் பாருங்க சார்...’

சயின்ஸ் படிச்சு டாக்டரான டாக்டரம்மாவே ‘சயின்ஸ ஒரு பக்கம் ஒதுக்கி வெச்சிடலாம்’னு சொல்லி அறிவுபூர்வமா பேசினபோதே பலபேரோட இதயம் நின்னுடுச்சு. இன்னும் கூடுதல் தகவல்கள் + அறிவியல் ஆதாரங்கள் + முன்னோர்களின் வாக்கு + கடவுள் மனசு வைக்கிறது எல்லாம் கலந்து அவங்க பேசப் பேச யூடியூப் தறிகெட்டு ஓடுது. சோசியல் மீடியால என்ன பேசினா 'Followers' கிடைப்பாங்கனு ரத்தம், சதை, நாடி, நரம்பெல்லாம் தெரிஞ்ச ஒரு வெயிட்டு கையாலதான் இப்படி எல்லாம் பேச முடியும்.

ஷர்மிகா சரண்
ஷர்மிகா சரண்

வாய்க்கு வந்தத அடிச்சு விடுற அவங்ககிட்ட உடம்புல இருக்க சர்வ பிரச்னைக்கும் வாய் வழியா மாத்திர சாப்பிடலாமா மேடம்னு மட்டும் தப்பித்தவறிக்கூட யாரும் கேட்டுடாதீங்க. மத்தபடி என்டர்டெயின்மென்ட்டுக்கு அவங்க கேரண்டி.

பாக்யராஜோட முருங்கைக்காய் காமெடிக்கு அப்றம் டாக்டரோட நுங்கு காமெடிதான் சமீபத்திய ட்ரெண்டிங். இதுக்கு அப்றம் எல்லாக் காய்கறிகளயும் அக்கு வேரா ஆணி வேரா ஆராய்ஞ்சு பாத்தாதான் டாக்டர் சொல்ல வந்த அறிவியல் என்னனு வெகுஜனங்களுக்கு வெளங்கும்போல.

கத்தரிக்காய் சாப்ட்டா என்னாகும், தக்காளி சாப்ட்டா என்ன பலன், தர்பூசணி சாப்பிட்டா எதுக்கு நல்லதுனு சீக்கிரமா சொல்வாங்க. அதுவரைக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுல காத்திருப்போம்.