Published:Updated:

"சோதிக்காதீங்கடா என்னைய!" - கலர் மாஸ்க்கின் கதறல்களும், சர்ஜிக்கல் மாஸ்க்கின் சாபக்கேடுகளும்!

மாஸ்க்
News
மாஸ்க்

மக்கள் மால்களுக்கும், தியேட்டர்களுக்கும் சென்றுகொண்டிருக்க கொரோனாவும் கூடவே சென்றது. இதை ஒரேயடியாக ஒழித்துகட்ட முதலில் எல்லோரும் மாஸ்க் போடுங்கள் என்றால் நமது மக்கள் அதிலும் தங்களது க்ரியேட்டிவிட்டியை கலர்ஃபுல்லாகக் காட்ட மாஸ்க்கும் கலர் கலராக மாறியது.

வேகமாக பரவி வந்த கொரோனாவின் வண்டி தனது இரண்டாவது அலையோடு பெட்ரோல் தீர்ந்து நின்று விடும் என்று எதிர்பார்த்தால் ‘பெட்ரோல் விக்கிற விலைக்கு நானே சைக்கிள்ல தான்டா போயிகிட்டு இருக்கேன்’ எனக் குரங்குப் பெடல் போட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் அலையின்போது, கொரோனாவை துரத்தியடிக்கும் மாஸ்டர் பிளான்களாக கை தட்டுவது, டார்ச் லைட் அடிப்பது, பாத்திரங்களைத் தட்டுவது என முயன்று பார்த்தார்கள். ஆனால், “சத்தம் போட்டதும் பயந்துக்கிட்டு ஓடுறதுக்கு நான் என்ன ஃப்ளூ மாதிரி வைரஸ்ன்னு நினைச்சியா?! கொரோனாடா!!” என்று கபாலி ரேஞ்சுக்கு டயலாக் பேசிக்கொண்டு வீரியமாக வளர்ந்து நின்றது. மாற்றி மாற்றி மாஸ்டர் பிளான் போட்டதன் விளைவாக இறுதியில் ‘மாஸ்டர்’ படம் ரிலீஸானது ஒன்றுதான் மிச்சம். பரபரப்பாக வந்த மாஸ்டரும் வந்த கொஞ்ச நாளிலேயே ஆன்லைன் கிளாஸுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார்.

முகத்தோற்றத்தில் மாஸ்க்
முகத்தோற்றத்தில் மாஸ்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் மால்களுக்கும், தியேட்டர்களுக்கும் சென்றுகொண்டிருக்க கொரோனாவும் கூடவே சென்றது. இதை ஒரேயடியாக ஒழித்துகட்ட முதலில் எல்லோரும் மாஸ்க் போடுங்கள் என்றால் நமது மக்கள் அதிலும் தங்களது க்ரியேட்டிவிட்டியை கலர்ஃபுல்லாகக் காட்ட மாஸ்க்கும் கலர் கலராக மாறியது. நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு மாஸ்க் அணியுங்கள் என்றால் ஆன்லைன் கிளாஸில் அட்டன்டென்ஸ் போடும் ஸ்கூல் பசங்க போல வாயையும் மூக்கையும் எதோ மூடினால் போதும் என்று இருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதில் வீட்டின் மூலைகளில் அடங்கிக் கிடந்த பழைய துணிகள் தொடங்கி கல்யாண கர்சீப்பு வரை அனைத்தும் முகக்கவசங்களாக வளம் வரத் துவங்கின. ‘இதுல கூட மாஸ்க் தைக்கலாமா?’ என்று அகில உலக ஆராய்ச்சியாளர்களுக்கே அட்வைஸ் கூறினர் நம் நாட்டு மக்கள்! இதை வைத்து கூட்டமாக செல்லும் வாகனங்களின் மத்தியில் யாரெல்லாம் மாஸ்க் அணியவில்லை என்று போலீஸார் எளிதாகக் கண்டறிந்தனர். இதில் உச்சமாக மாஸ்க்கை தாடைக்கு போடுவது. தூக்கம் வந்தால் அதே மாஸ்க்கை கண்களுக்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது என மாஸ்க்குடன் டிசைன் டிசைனாக ரகளைகள் செய்து வருகின்றனர்.

மாஸ்க் பயன்பாடு
மாஸ்க் பயன்பாடு

பிறகென்ன, இரண்டாவது அலையில் வைரஸ் உருமாறியது போலவே மாஸ்க்குகளின் பயன்பாடுகளும் உருமாறின. ‘முகக்கவசங்கள் மனித உடலை பாதுகாக்கும்’ என்ற ஐ.நா-வின் அறிவுறுத்தல் நமது மக்களின் செவிகளுக்கு உருமாறி கேட்டுவிட்டதால் மாஸ்க்குகள் நம் மக்கள் கையில் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டு வருகின்றன. அதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஆனால், எல்லாமே ‘என்ன கொடுமை சரவணன் (கொரோனா) இது!’ ரகம்தான். அவற்றில் சில சாம்பிள்களை பார்ப்போமா!

1. சென்ற வாரம் வீட்டிற்கு பத்திரிகை வைக்க வந்த பங்காளி ஒருவர் அணிந்து வந்த மாஸ்க்கை நான்காக மடித்து பாக்கெட்டில் வைத்திருந்தார். பேசிக்கொண்ட இருக்கும்போது வியர்த்ததால் அந்த மாஸ்க்கையே கர்சீப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆல் இன் ஆல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. லாக்டௌனில் நாள் முழுக்க ‘டார்க்’ சீரிஸ் பார்த்த நண்பன், சார்ஜின்றி தத்தளித்துக்கொண்டிருந்த தனது செல்ஃபோனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு புதிதாக வாங்கி வந்திருந்த N-95 மாஸ்கை எடுத்து செல்ஃபோனுக்கு தொட்டில் கட்டி விட்டிருந்தான். அதை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக எடுத்துப் போட்டிருந்தவனிடம், ‘ஏன்டா இப்புடி’, என்று கேட்டால் “சீக்கிரம் சார்ஜ் ஏறிடும்டா மாப்ள. நீயும் பண்ணிப்பாரு” என்கிறான் மனசாட்சியே இல்லாமல்! என்னென்ன சொல்றான் பாருங்க!

மாஸ்க் பயன்பாடு
மாஸ்க் பயன்பாடு

3. அதேபோல், டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ரெடியாக சிலர் கொண்டைகளில் மாஸ்கை மாட்டிக்கொண்டும், ஆஃபீஸுக்கு அவசர அவசரமாக மாஸ்க்கை சாக்ஸாக அணிந்துகொண்டும் அலைந்து திரிந்து வருகின்றனர். எனக்கு தான்டா ஃபீலிங்கு!

இதெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கும் மாஸ்குக்கு மட்டும் வாய் இருந்தால், “சோதிக்காதீங்கடா என்னைய” என்று புலம்பித் தள்ளியிருக்கும். மீண்டும் மீண்டும் புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

மாஸ்க் பயன்பாடு
மாஸ்க் பயன்பாடு
நான் சொல்ல வருவது உங்களுக்கு புதிதல்ல இருந்தாலும் சொல்கிறேன். “நாம் நோயுடன் போராட வேண்டும். நோயாளிகளுடன் அல்ல. இல்லையெனில், இதே கட்டுரையை இன்னும் நான்கு பக்கங்ளுக்கு எழுத நேரிடும்!”