Published:Updated:

மாஸ்க்குகளின் மல்டி பர்பஸ் பயன்கள் - ஒரு ஜாலிப் பதிவு! #MyVikatan

மாஸ்க்
News
மாஸ்க்

மாஸ்க்குகள் வேறு எதற்கெல்லாம் பயன்படுகின்றன? ஒரு ஃபன் பதிவு!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றும் கவசக் குண்டலங்களாக இன்று மாஸ்க்குகள் மாறிவிட்டன. அதே மாஸ்க்குகள் வேறு எதற்கெல்லாம் பயன்படுகின்றன...

ஒரு ஃபன் பதிவு!

# டஸ்ட் அலர்ஜி:

மாஸ்க் அணிவதால் தூசுகளால் ஏற்படும் தொல்லைகள் இல்லவே இல்லை. எனவே டஸ்ட் அலர்ஜி கொண்டோர் எல்லாம் மாஸ்க்குகளின் புண்ணியத்தில் பவர் பாண்டிகளாக நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் கெத்தாக வலம்வருகின்றனர்.

# கடன்காரர்:

கடன்காரர்களைக் கண்டாலே பேய் பிசாசுகளைப் பார்த்ததுபோல தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு பயந்து ஓடியதெல்லாம் ஒரு காலம். ஆனால், இன்றோ முகத்தை மட்டும் மூடியபடி எட்ட நின்று கடன்காரர்களிடமும் ஹாய் சொல்லும் வாய்ப்பை மாஸ்க்குகள் நமக்கு வழங்கிவிட்டன.

Masks
Masks
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

# கடனாளி:

வழக்கமாக நம்மைப் பார்த்ததுமே சட்டெனக் கடன் கேட்கும் நபர்கள் எங்கும் நிறைந்திருப்பர். இப்போது மாஸ்க்குகளின் தயவால் அவர்களால் நம்மை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை.

அடையாளம் கண்டு நம்மை அவர்கள் கடன் கேட்கத் தொடங்கும் முன்பே அந்த இடத்திலிருந்து நாம் அவசரமாய் எஸ்கேப் ஆகிவிட முடிகிறது.

# உறக்கம்:

அலுவலகப் பொழுதுகளில் சற்று கண்ணயரும்போதெல்லாம் மாஸ்க்குகளை ஒரு இன்ச் ஏற்றிவிட்டுக்கொண்டாலே அவை நம்மைக் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் கர்மவீரர்கள் ஆகிவிடுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

# வசவுகள்:

மாஸ்க் அணிந்த அதிகாரிகளால் அதிகம் பேச முடிவதில்லை. எனவே மூன்றாம் வகுப்புக் குழந்தை தவறு செய்துவிட்டு ஆசிரியரிடம் எளிதாகத் தப்பிப்பது போலவே, தவறு செய்யும் பல அலுவலர்கள் அதிகாரியின் வசவுகளிலிருந்து சுலபமாகத் தப்பித்துவிட முடிகிறது.

# மேக்கப்:

மணிக்கணக்கில் கஷ்டப்பட்டுப் போட்ட மேக்கப்புகள் எல்லாம் கண நேர வெயிலில் கானல் நீர்போல் கரைந்துபோய் பலரைக் கடுப்பூட்டும். ஆனால், மேக்கப்புகள் கலைவதைத் தடுக்கும் தற்காப்புக் கேடயங்களாக மாஸ்க்குகள் புதிய அவதாரம் எடுத்துள்ளன.

Masks
Masks
Representational Image

# பேச்சு:

மாஸ்க் அணிந்த நிலையில் ஒருவர் பேசுவது எளிதாகப் புரியாது. எனவே நமக்கு ஆழ்ந்து சிந்திக்க ஓர் அரிய வாய்ப்பையும், ஒருமுறை பேசிய பேச்சை மறுத்துப் பேச மறுபடியும் வாய்ப்பு அளிக்கும் அரிய உபகரணங்களாகவும் மாஸ்க்குகள் திகழ்கின்றன.

# திருடன்:

செயின் பறிப்பவர்களும், திருடர்களும் மாஸ்க்குகளுக்கு அனுதினமும் தற்காலிக குலதெய்வ வழிபாடு நடத்துகின்றனர். அவர்கள் அவ்வப்போது மகிழ்வுடன் மாஸ்க்குகளைத் தூக்கிவிட்டுக் கொண்டு மந்தகாசப் புன்னகையும் புரிகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

# எச்சில்:

வாகனங்களில் செல்லும்போது ஜன்னல் வழியே எச்சில் துப்பும் அபத்தங்களை முற்றாக மூழ்கடித்து, மனித நாகரிகத்தைப் புதிதாக முத்தெடுக்க வைத்து மாஸ் காட்டுகின்றன மாஸ்க்குகள்.

வாகனங்களில் போகும்போது வெளியே துப்புவது இந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்து போன அதிசயத்தைப் பார்த்து போராளிகள் பலர் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளனர்.

Representational Image
Representational Image

# போதை:

குடிமகன்களின் ஊதல் தொல்லைகளிலிருந்து காவலர்களைக் காக்கும் காவல் தெய்வங்களாக மாஸ்க்குகள் மாற்றம் அடைந்துள்ளன.

# அமைதி:

பேருந்துகளில் பயணிகளின் கத்தல்களும் சண்டைகளும் வசவுச் சொற்களும் வழக்கொழிந்து போய்விட்டன. ஒவ்வொரு பேருந்தையும் நடமாடும் நூலகமாக அமைதியாய் வலம் வரச் செய்யும் மாயாஜாலத்தை மாஸ்க்குகள் உண்டாக்கி விட்டன.

# பயணம்:

மாஸ்க் அணிந்த நிலையில் நாம் மேற்கொள்ளும் பயணங்களில் அதிகமாகப் பேசுவது சிரமம். எனவே, மனைவியின் வசவுகளிலிருந்து கணவனோ, கணவனின் வசவுகளிலிருந்து மனைவியோ அவ்வப்போது தப்பித்துக்கொள்ள கணிசமான வாய்ப்பு கைகூடியுள்ளது.

# சூரிய ஒளி:

சூரிய ஒளி முகத்தில் விழாமல் பாதுகாக்கும் நவீன வடிகட்டியாக மாஸ்க்குகள் மாறிவிட்டன. ஆகவே ஆறு வார சிவப்பழகு க்ரீம்கள் எதையும் போடாமலேயே பலரும் தகதகவென ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர்.

Masks
Masks
Pixabay

# ரகசியம்:

முக்கால்வாசி முகம் மூடப்பட்டுள்ளதால் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நவீன நாஸ்டர்டாமஸ்களாக நம் எதிராளிகள் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே ரகசியக் கசிவைத் தடுக்கும் அதிநவீன இயந்திரங்களாகவும் மாஸ்க்குகள் மாறிவிட்டன.

# டிசைன்:

உடைகளுக்கேற்ப புதுமையாக மாஸ்க்குகளை வடிவமைக்கும் அரிய வாய்ப்பினால், தெருவுக்குத் தெரு காஸ்ட்யூம் டிசைனர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது. ஆடை வடிவமைப்பின் அரிச்சுவடி தெரியாதோர்கூட புதுப்புது மாஸ்க்குகளை வடிவமைத்துப் பூரிப்பில் ஆழ்ந்து போகின்றனர்.

# மாயம்:

பெருமையும் பொறாமையும் கொண்ட பல மனிதர்களின் மோசமான முகபாவங்களைப் பார்க்காமலேயே கடந்து விடச் செய்யும் மாயத்தையும் மாஸ்க்குகள் நிகழ்த்தியுள்ளன.

மாஸ்க்
மாஸ்க்

# விளம்பரம்:

மாஸ்க்குகளில் அச்சிடப்படும் புதுமையான விளம்பரங்களால், நிகழ்ச்சிகளின் இடைவேளைகள் ஏதுமின்றி விளம்பர வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரம் என்பது போய், விளம்பரம் மட்டுமே நிகழ்ச்சி என்னும் மாயாஜாலத்தை மாஸ்க்குகள் நிகழ்த்தியுள்ளன.

# நடிகர்:

தன் முகம் தெரியாவிட்டாலும் தனக்குப் பிடித்தமான நடிகர்களின் முகத்தை ரசிகர்கள் மாஸ்க்குகளாக அணிந்து தங்கள் ரசிப்புத்தன்மையை அடுத்த கட்டத்துக்கு அவசரமாக உருட்டிச் செல்கின்றனர். நடிகர் முகம் போட்ட மாஸ்க்குகளுக்கேற்ப ஹேர் கட்டிங் என்பதும் அவசர அவசரமாக டிரெண்டிங் கோதாவில் குதித்துள்ளது.

# குப்பை லாரி:

காலை நேரப் பயணங்களின்போது நம்மால் முந்திச் செல்ல முடியாதவாறு முன்னால் செல்லும் மாநகரக் குப்பை லாரிகளில் நறுமணங்கள் எல்லாம் மாஸ்க்குகளின் உபயத்தால் எங்கோ போய் தற்கொலை செய்துகொண்டன.

# பன்னீர்:

சிலர் பேசும்போதெல்லாம் வாயிலிருந்து தண்ணீர் லாரிகள் போன்று தெளித்துக்கொண்டே இருக்கும் பன்னீர் தூவலில் இருந்து காக்கும் குடை வள்ளல்களாக மாஸ்க்குகள் மாறியுள்ளன. மாஸ்க்குகளின் மாயத்தால் பன்னீர் தெளிக்கும் புண்ணியவான்கள் இப்போதெல்லாம் வாயை மூடியே பேசுகின்றனர்.

மாஸ்க்
மாஸ்க்
Pixabay

# செலவு:

இன்று மனிதர்களின் அத்தனை அலங்காரங்களும் நெற்றிக்கும் கண்களுக்கும் மட்டுமே. எனவே நெற்றியும் கண்களும் மாஸ்க்குகளுக்கு செஞ்சோற்றுக் கடன்பட்டவையாக ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன. மேலும் நம் மாதாந்திர பட்ஜெட்டில் மலை போன்று உயர்ந்து நின்ற காஸ்மெடிக் செலவுகள் எல்லாம் இன்று மடுபோன்று தேய்ந்து, அதல பாதாளத்துக்குப் பாயத் தயாராகிக் கொண்டுள்ளன.

# சண்டை:

குழாயடிச் சண்டைகளும் குடுமிப்பிடி சண்டைகளும் மாஸ்க்குகளின் புண்ணியத்தால் எங்கே போய் ஒளிந்துகொண்டன என்று யாருக்கும் தெரியவில்லை. எதிர்காலத் தலைமுறைக்கு இவற்றையும் நடித்துத்தான் காட்டவேண்டுமோ என்னும் ஐயம் பலருக்கும் ஹெவியாய் எழுகிறது.

# கொட்டாவி:

அலுவலக மீட்டிங்குகள் போரடிக்கும்போது அடிக்கடி வரக்கூடிய கொட்டாவிகளை எல்லாம் வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி, ஒடுங்கிப் போகச் செய்யும் சர்வாதிகாரியாக மாஸ்க்குகள் திகழ்கின்றன.

Masks
Masks
Pixabay

# காதல்:

முகத்தைப் பார்க்காமல் ஆறு அடி இடைவெளி விட்டும்கூட நேசம் கனியும் என்னும் காதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் நவீன குறுந்தொகைகளாக மாஸ்க்குகள் மலர்ந்துள்ளன. இதழின் புன்னகையைவிட இதயத்தின் புன்னகையை ரசிக்கக் காதலர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களாகவும் அவதாரம் எடுத்துள்ளன மாஸ்க்குகள். பறக்கும் முத்தங்களை டிரெண்டிங் ஆக்கியதிலும் மாஸ்க்குகளின் பங்கு மகத்தான ஒன்றே!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/