Published:Updated:

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்... 11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாகப் பிரிப்பு

அறுவை சிகிச்சை
News
அறுவை சிகிச்சை ( @KSRelief_EN )

மருத்துவர் அப்துல்லா அல் ரபீஹ்வின் தலைமையில், சிறப்பு நிபுணர்கள், செவிலியர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 27 பேர் அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்... 11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாகப் பிரிப்பு

மருத்துவர் அப்துல்லா அல் ரபீஹ்வின் தலைமையில், சிறப்பு நிபுணர்கள், செவிலியர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 27 பேர் அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர்.

Published:Updated:
அறுவை சிகிச்சை
News
அறுவை சிகிச்சை ( @KSRelief_EN )

ஈராக்கில், அலி மற்றும் உமர் என்ற குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். குழந்தைகளின் அடிப்பகுதி மார்பு, வயிறு ஒன்றாக இணைந்துள்ளன. இரட்டையர்கள் இருவரும் கல்லீரல், பித்தப்பை, குடல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களை அறுவை சிகிச்சை மூலமாகப் பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மருத்துவர்கள்!
மருத்துவர்கள்!
@KSRelief_EN

சவூதி ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா சிறப்புக் குழந்தைகள் மருத்துவமனையில், வியாழனன்று 6  நிலைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர் அப்துல்லா அல் ரபீஹ்வின் தலைமையில் சிறப்பு நிபுணர்கள், செவிலியர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 27 பேர் அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர்.

11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் அல் ரபீஹ் கூறுகையில், ``ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளான உமர் மற்றும் அலி, 2022 செப்டம்பர் மாதத்தில் அவர்களின் பெற்றோர்களால் ரியாத்திற்கு கொண்டு வரப்பட்டனர். குழந்தைகளின் அடி மார்பும் வயிறும் ஒட்டியிருந்தன. இருவரும் கல்லீரல், குடல் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.

அறுவை சிகிச்சை 70 சதவிகிதம் வெற்றிகரமாக இருந்தது. ஈராக்கில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை இங்கு ஐந்தாவது முறையாக நடைபெறுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.