Published:Updated:

பாம்பைக் கடித்துக் கொன்ற 2 வயதுச் சிறுமி, திகிலூட்டிய சம்பவம்... என்ன நடந்தது?

பாம்பை கொன்ற இரண்டு வயது சிறுமி

பாம்பை பார்த்தால் பதறி அடித்துக்கொண்டு பத்தடி ஓடிச் சென்று திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்ட நமக்கு, தன்னை கடித்த பாம்பினை திரும்ப கடித்துக் கொன்ற இரண்டு வயது சிறுமியின் செயல் வியப்பை ஏற்படுத்துகிறது.

பாம்பைக் கடித்துக் கொன்ற 2 வயதுச் சிறுமி, திகிலூட்டிய சம்பவம்... என்ன நடந்தது?

பாம்பை பார்த்தால் பதறி அடித்துக்கொண்டு பத்தடி ஓடிச் சென்று திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்ட நமக்கு, தன்னை கடித்த பாம்பினை திரும்ப கடித்துக் கொன்ற இரண்டு வயது சிறுமியின் செயல் வியப்பை ஏற்படுத்துகிறது.

Published:Updated:
பாம்பை கொன்ற இரண்டு வயது சிறுமி

துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் 2 வயதுச் சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். பாம்போடு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பைப் பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பைக் கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார்.

பாம்பைக் கொன்ற 2 வயதுச் சிறுமி
பாம்பைக் கொன்ற 2 வயதுச் சிறுமி

சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமி இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்துள்ளனர். வாயில் 20 இன்ச் அளவுள்ள பாம்பை, புதிதாக முளைத்த பற்களைக் கொண்டு கடித்துக்கொண்டிருந்துள்ளார். சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், பாம்பு சிறுமி கடித்ததால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன் பின், சிறுமியின் குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, அருகில் இருந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

24 மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின், சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தந்தை, சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தன் குழந்தை பாம்பைத் தன் பற்களால் இறுக்க கடித்துக்கொண்டிருந்ததைச் சொன்னதாகவும், அப்போதே அந்தப் பாம்பு இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாம்பைக் கொன்ற 2 வயதுச் சிறுமி
பாம்பைக் கொன்ற 2 வயதுச் சிறுமி

மேலும், `இறைவன் என் குழந்தையை பாதுகாத்துள்ளார். குறைவான விஷத்தன்மை கொண்ட பாம்பு என்பதால், குழந்தை விரைவில் உடல் நலம் தேறிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, துருக்கி சிறுமியின் வியப்பில் ஆழ்த்தும் வீரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.