Published:Updated:

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

பாக்டீரியா ( சித்திரிப்புப் படம் )

1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும்பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது.

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும்பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது.

Published:Updated:
பாக்டீரியா ( சித்திரிப்புப் படம் )

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், "பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் 1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில், ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் பிலிப் ஸ்லாவின், இசிக் குல் ஏரிக்கு அருகிலுள்ள சூ பள்ளத்தாக்கில் 1338, 1339-ம் ஆண்டுகளில் மூன்று கல்லறைகளைக் கண்டுபிடித்தார்.

 DNA
DNA

அதைத் தொடர்ந்து அந்த மூன்று கல்லறைகளில் நெஸ்டோரியன் கிறிஸ்தவ சமூகத்தில் புதைக்கப்பட்ட மூன்று பெண்களின் பற்களிலிருந்து, யெர்சினியா பெஸ்டிஸ் பிளேக் பாக்டீரியாவின் முதல் டி.என்.ஏ தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர். அந்த டி.என்.ஏ-வை ஆய்வுசெய்தபோது, நோய்க் கிருமியின் மரபணு தன்னை மறுகட்டமைத்து அது பிளாக் டெத் எனும் தொற்றை ஏற்படுத்தியதையும், இன்று இருக்கும் பெரும்பாலான பிளேக் நோய்களுக்கும் அந்த நோய்க்கிருமியின் மரபணுதான் வழிவகுத்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர், மற்றும் முதன்மை எழுத்தாளரான மரியா ஸ்பைரோ, 'புபோனிக் பிளேக் மத்திய தரைக்கடல் முழுவதும் பழைய சில்க் ரோடு வர்த்தகப் பாதை வழியாகப் பரவியது. அதற்கு முன்பு 500 ஆண்டுகள் வரை நீடித்த கொடிய நோய்களின் அலையால், இது `இரண்டாவது பிளேக் தொற்றுநோய்’ என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிளேக் பரவுவதற்கு வர்த்தகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பாக்டீரியா (Representational Image)
பாக்டீரியா (Representational Image)
Photo by CDC on Unsplas

1338 -1346-க்கு இடையில் மத்திய ஆசியாவிலிருந்து கருங்கடல் வரை இந்த நோய் பரவியது இது போன்ற வர்த்தகம் வழியேதான் என்று முடிவு செய்வது சரியாக இருக்கும்' எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், லீப்ஜிக்கில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட் ஃபார் எவல்யூஷனரி ஆந்த்ரோபாலஜி ஆய்வாளரான பேராசிரியர் ஜோஹன்னஸ் க்ராஸ், `நாங்கள் பிளாக் டெத் மரணம் குறித்தான பிளேக் நோயின் ஆதியைக் கண்டுபிடித்திருக்கிறோம். மேலும், 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism