Published:Updated:

`#Corona-வைத் தொடர்ந்து வைரலாகும் #Hantavirus!' - பின்னணி என்ன?

ஹான்டா வைரஸ்
ஹான்டா வைரஸ் ( Twitter )

சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஹான்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிடவே, அந்த ட்வீட் வைரலானது.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஷான்டாங் மாகாணத்திலிருந்து பேருந்தில் திரும்பியபோது ஹான்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ட்விட்டரில் பதிவிட்டது. மேலும், அவருடன் பயணித்த 32 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

`மார்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை!’- தமிழக அரசு தடை உத்தரவு அரசாணை சொல்வதென்ன?

இந்த ட்வீட் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், பலரும் பல்வேறு விதமாகக் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். `கொரோனாவைத் தொடர்ந்து ஹான்டா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்பன போன்ற கமென்டுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சீனா மற்றும் வைரஸ் என்ற இரண்டு பதங்களால் பலர் அச்சத்துடன் கமென்டுவதைப் பார்க்க முடிகிறது.

குளோபல் டைம்ஸ் ட்வீட்
குளோபல் டைம்ஸ் ட்வீட்

இதுபோன்ற சூழல்களில் வதந்திகளைப் பிரித்தறிய வேண்டியது அவசியமானது. உண்மையில் ஹான்டா வைரஸ் என்பது புதிதாகத் தோன்றிய வைரஸ் இல்லை. ஏற்கெனவே இருக்கும் வைரஸ்தான். கொரோனா போன்று ஹான்டா வைரஸ் காற்றில் பரவக் கூடியது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸல்ல என்றும் சொல்கிறார்கள். இது எலிகளைத் தாக்கும் ஒருவகையான வைரஸ் என்று கூறும் ஆய்வாளர்கள், எலிகளின் சிறுநீர் அல்லது சளி ஆகியவற்றைத் தொடும்போது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால்  காற்று மாசுபடுதலில் நடந்த மாற்றம்! உப விளைவுகளைத் தக்கவைக்குமா உலக நாடுகள்!?

அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின்படி, ஹான்டா வைரஸ் என்பது எலிகளால் மட்டுமே பரவும். இது மனிதர்களுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஹான்டா வைரஸ் பல்மோனரி சிண்ட்ரோம் (hantavirus pulmonary syndrome) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால், காய்ச்சல், தலைவலி, அடிவயிற்றில் பிரச்னைகள் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

எலி
எலி
Pixabay

ஹான்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபட்சத்தில், அதிகப்படியான இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், 38 சதவிகிதம் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

அடுத்த கட்டுரைக்கு