Published:Updated:

`ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை!' - உறுதிப்படுத்திய அதிபர் மாளிகை அதிகாரிகள்

ட்ரம்ப்
ட்ரம்ப்

பிரேசில் நாட்டு அதிகாரிகளைச் சந்தித்த பின் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க மக்களிடையே இருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சர்சசை உலக அளவில் பேசு பொருளானது. இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது அதிபர் ட்ரம்ப்புடன் பிரேசில் குடியரசுத் தலைவர் போல்சனாரோவின் சந்திப்புதான். கடந்த வாரம் பிரேசில் குடியரசுத் தலைவர் போல்சனாரோ, அவரின் பத்திரிகைச் செயலாளர் வஜிங்கார்டன் எனச் சில பிரேசில் தலைவர்கள் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளனர்.

corona
corona

அதிபர் ட்ரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள தனது ரிசார்ட்டில் பிரேசில் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும் மிகக் குறுகிய இடைவெளியில் இருந்தபடி உரையாடியுள்ளனர்.

மேலும், அவர்கள் அமெரிக்காவின் சில பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒன்றாகப் பயணித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.

கொரோனா
கொரோனா

அமெரிக்க அதிபரின் சந்திப்புக்குப் பின்னர் பிரேசில் குடியரசுத் தலைவரின் பத்திரிகைச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரேசில் குடியரசுத் தலைவர் போல்சனாரோவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தது.

இது மிகப்பெரிய சர்ச்சையாகி, பரிசோதனைகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. இதனிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு இல்லை என உறுதியாகியதை அவரின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிரேசில் நாட்டு அதிகாரிகளைச் சந்தித்த பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க மக்களிடையே இருந்தது. இந்தச் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அவரது பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

வெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்...ஒற்றை வாழைப்பழத்திற்கு நடக்கும் யுத்தம்! #Corona

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிபரின் தனி மருத்துவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அமெரிக்காவில் கொரோனா பரவலில் அரசின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், எனது உடலின் வெப்பநிலை வெள்ளை மாளிகையின் மருத்துவ அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.

Corona Virus
Corona Virus

இந்த நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்த செய்தியாளர்கள் உட்பட அனைவரின் உடல் வெப்பநிலை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை அதிபர் பென்ஸ் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் அனைவரும் மற்ற ஊழியர்களிடம் இருந்து உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு