Published:Updated:

`தடுப்பூசி போட்டவர்களும் இனி மாஸ்க் அணிய வேண்டும்!' - அமெரிக்காவின் புதிய முடிவுக்கு என்ன காரணம்?

Man wearing mask
Man wearing mask ( AP Photo/Vadim Ghirda )

அமெரிக்காவில் தற்போது டெல்டா வேரியன்ட் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் 80% மக்கள் இந்த வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மட்டுமல்லாது வீட்டிலும் அலுவலகங்களிலும்கூட முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention - CDC) கூறியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது டெல்டா வேரியன்ட் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 சதவிகித மக்கள் இந்த வகை உருமாறிய கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

US President Joe Biden
US President Joe Biden
AP Photo / Patrick Semansky
1918 பெருந்தொற்றும் தற்போதைய கொரோனா பெருந்தொற்றும்... மூன்றாம் அலை வந்தால் சமாளிக்குமா தமிழகம்?!

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``நம் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து இதனை பின்பற்றும் பட்சத்தில் 2020-ல் ஏற்பட்டவாறு நாட்டில் பொதுமுடக்கம், ஊரடங்கு , பள்ளி, கல்லூரி மூடுவது போன்றவை நடக்காமல் தடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.

அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், `` 63.4 சதவிகிதம் அமெரிக்க மாகாணங்களில் தொற்றின் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது'' என அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், தொடக்கக்கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது சிடிசி. அதிகமான மக்கள் தடுப்பூசி போடும் வரையிலும் வெளியில் மட்டுமல்லாது வீட்டுக்குள்ளும் மக்கள் முகக்கவசம் அணியும் இந்த வரைமுறை முக்கியம் என்று இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

face mask
face mask
AP Photo/Alberto Pezzali
கொரோனா: 10 மடங்கு அதிகரித்த ஆக்ஸிஜன் விலை; சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு; திணறும் இந்தோனேசியா!

முன்னதாக, முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முகக்கவசம் அணிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை குறையக் குறைய தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையும் நின்றுவிட்டது. தற்போது 58 சதவிதம் மக்களே அமெரிக்காவில் முழுவதுமாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

புதிய ஆய்வு அறிக்கையின் முடிவின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படலாம், அவர்கள் மற்றவர்களுக்கும் தொற்றை பரப்பலாம் என்றும், இதை பொதுமக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் டாக்டர் ராச்சேல் வலேன்ஸ்கை கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு