Published:Updated:

கோவிட் டெல்டா வைரஸ்: அமெரிக்காவில் மீண்டும் லட்சத்தில் தினசரி பாதிப்பு; பிரிட்டனின் நிலை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Patient at Hospital (Representational Image)
Patient at Hospital (Representational Image) ( Image by Parentingupstream from Pixabay )

சுமார் 33 கோடி பேர் மக்கள்தொகையுள்ள அமெரிக்காவில் 50% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். 70 சதவிகிதத்துக்கு அதிகமானோர் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவிட் தடுப்பூசியில் தன்னிறைவு பெற்ற நாடான அமெரிக்காவில் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அதாவது, 2020-ம் ஆண்டு நவம்பர் மாத்துக்குப் பிறகு மீண்டும் தொற்றால் ஒருநாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

A person wears a mask while jogging
A person wears a mask while jogging
AP Photo / Ted S. Warren
`தடுப்பூசி போட்டவர்களும் இனி மாஸ்க் அணிய வேண்டும்!' - அமெரிக்காவின் புதிய முடிவுக்கு என்ன காரணம்?

சுமார் 33 கோடி பேர் மக்கள்தொகையுள்ள அமெரிக்காவில் 50% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். 70 சதவிகிதத்துக்கு அதிகமானோர் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

``தடுப்பூசியை போட்டுக்கொள்வதைத் துரிதப்படுத்தியதன் விளைவாகத்தான் ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சம் என்ற அளவில் உள்ளது. இல்லையென்றால் ஜனவரி மாதத்தோடு ஒப்பிடும்போது பாதிப்பு பல லட்சங்களைத் தாண்டியிருக்கும்" என்று அந்நாட்டின் நோய்க் கட்டப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோஷல் வாலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 500 என்ற சராசரியை அடைந்துள்ளது.

America
America
AP

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ்தான் அமெரிக்காவில் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதே பகுதியில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் இறங்குமுகம்!

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் டெல்டா வைரஸ்தான் பிரிட்டனில் மூன்றாவது அலை பீதியை ஏற்படுத்தியது. ஜூலை மாத இறுதியில் ஒருநாளைக்கு சராசரியாக 43,000 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். லாக்டௌன், அதிக கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தற்போது பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான காரணங்கள் பற்றி பேசியுள்ள அந்நாட்டின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பாப் போலிங்கர், ``அமெரிக்காவைவிட பிரிட்டன் தடுப்பூசி செலுத்துவதில் முன்னணி வகித்தது. பிரிட்டனில் தற்போது 88% பெரியவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. 73% பேர் முதல் தவணை எடுத்துக்கொண்டுள்ளனர்.

 பிரிட்டன்
பிரிட்டன்
Covid Questions: கோதுமை, ரவை, மைதா சாப்பிட்டால் அலர்ஜி; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாலும், மேலும் கணிசமானோர் நோய் பாதித்து மீண்டதாலும் ஏற்பட்டுள்ள மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) ஏற்பட்டுள்ளதும் பிரிட்டனில் பாதிப்பு குறைந்ததற்கான முக்கிய காரணம். மேலும் மாஸ்க் அணிதல், நோய் கண்டறியப்பட்டவர்கள் க்வாரன்டீன் செய்யப்பட்டது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியது, தேவையில்லாத பயணத்தைத் தவிர்த்தது போன்ற பொதுமக்களின் செயல்பாடுகளும் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு