Published:Updated:

குழந்தைகளுக்கு மட்டும் வேலை செய்யும் காசநோய் தடுப்பூசி; பெரியவர்களின் நிலை என்ன?

காசநோய்

ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் தொடங்குகிறது.

குழந்தைகளுக்கு மட்டும் வேலை செய்யும் காசநோய் தடுப்பூசி; பெரியவர்களின் நிலை என்ன?

ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் தொடங்குகிறது.

Published:Updated:
காசநோய்

`மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium Tuberculosis) எனும் பாக்டீரியாவால் காசநோய் பரவுகிறது. குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுப்பதற்கு பி.சி.ஜி. (BCG – Bacille Calmette-Guerin) என்னும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 100 வருடங்களாவே உலகம் முழுவதும் காசநோய்க்கு இந்த ஒரு தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

vaccine
vaccine
AP Photo/Karel Prinsloo, File

இந்நிலையில் பி.சி.ஜி தடுப்பூசி எந்த அளவிற்கு ஒருவருக்கு காசநோய் ஏற்படாமல் தடுக்கும், எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் போன்றவற்றை பாஸ்டன் பல்கலைக்கழக பொது சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆராய்ச்சியின் தெளிவான விளக்கத்தை `தி லான்செட் குளோபல் ஹெல்த்’ என்ற இதழில் வெளியிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், பிறக்கும்போது ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் தொடங்குகிறது.

இதுவே இளம் பருவத்தினருக்கும், பெரியவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியினால் எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

காசநோய்
காசநோய்

ஒருவேளை குழந்தைகளுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் அவையும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு காசநோய்க்கு எதிராகச் செயல்படும் திறனை இழக்கலாம். எனவே காசநோய்க்கு எதிராக புதிய தடுப்பூசிகளின் தேவை உள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக சுமார் 17 நாடுகளில் இருந்து 1998 ஆம் ஆண்டு முதல், 2018 வரை காசநோயால் பாதிக்கப்பட்ட 70,000 நபர்களது பி.சி.ஜி தடுப்பூசியின் தாக்கம் குறித்த தரவுகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.