Published:Updated:

`பியூபோனிக் பிளேக்' - 2020 முடியும் வரை சீனாவில் நோய் எச்சரிக்கை!

Bubonic Plague
Bubonic Plague

பியூபோனிக் பிளேக் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நோய். யெர்சினியா பெஸ்டிஸ் (Yersinia Pestis) என்ற பாக்டீரியா, பிளேக்கின் காரணி. இந்தத் தொற்று, கொறித்துண்ணிகளிடமிருந்து (Rodents) உண்ணிகள் (fleas) மூலம் பரவும் நோய்.

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, இன்று உலகையே கையகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து எப்போது மீள்வோம் என்று உலகமே எதிர்பார்த்துள்ள நிலையில், வட சீனாவில் உள்ள ஒரு நகரத்தில் பியூபோனிக் பிளேக் (Bubonic Plague) நோய் பரவ ஆரம்பித்திருப்பது, மக்களிடம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bubonic Plague
Bubonic Plague

தெற்கு மங்கோலியாவில் உள்ள கோவட் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயதுள்ள சகோதரர்களுக்கு, பியூபோனிக் பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மர்மோத் (Marmot) என்ற கொறித்துண்ணியின் கறியை உண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மங்கோலியா உட்பகுதியில், பிளேக் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மர்மோத் கறியை மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

கொரோனா: `முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கம்!’ - தடுப்பு மருந்து குறித்து மத்திய அரசு

பியூபோனிக் பிளேக் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நோய். யெர்சினியா பெஸ்டிஸ் (Yersinia Pestis) என்ற பாக்டீரியா, பிளேக்கின் காரணி. இந்தத் தொற்று, கொறித்துண்ணிகளிடமிருந்து (Rodents) உண்ணிகள் (fleas) மூலம் பரவும் நோய். பாதிக்கப்பட்ட உண்ணி மனிதனைக் கடிக்கும்போது, தொற்று மனிதனுக்கும் ஏற்படுகிறது. பிளேக் நோயால் இறந்த விலங்கின் உடலில் ஏற்படும் சுரப்பு மூலமும் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கப்பட்ட மனிதருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், 24 மணி நேரத்தில் உயிரிழக்க நேரலாம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், 'மனிதர்களில் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால், உடனே தெரிவிக்க வேண்டும்' என்றிருக்கிறார். நோய்க்கான எச்சரிக்கை 2020-ம் ஆண்டு முடியும் வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Bubonic Plague
Bubonic Plague

பியூபோனிக் தொற்று கண்டறியப்பட்ட இளைஞர்கள் இருவரும் இப்போது இரு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த 146 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். சீனாவில் சென்ற வாரத்தில், இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் தாக்கம் பன்றிகள் மூலம் மக்களுக்குப் பரவலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

14-ம் நூற்றாண்டில், பியூபோனிக் பிளேக் நோய்க்கு ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் 5 கோடி மக்கள் உயிரிழந்தனர். அதை கறுப்பு மரணம் என்று வரலாறு கூறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு