Published:Updated:

`மகளால் கலங்கிய தாய்; வைரல் வீடியோ'!- பாசப்போராட்டத்தில் சீன செவிலியர்கள் #Coronavirus

சீனா
சீனா

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சீனாவில் இது புத்தாண்டு மாதம். இந்த மாதத்தில் சீன வீதிகள் விழாக்கோலம் பூண்டு காணப்படும். ஆனால், இந்த வருடம் அப்படியில்லை. மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனா வைரஸ் சீன மக்களை மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் முடக்கிப்போட்டுள்ளது. வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மக்களின் முகத்தில் ஒருவித பயமும் சோகமும் காணப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் பரவி வரும் இந்தக் கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்களும் செவிலியர்களும் நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் 9 வயதுச் சிறுமி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தச் சிறுமியின் தாய் ஒரு செவிலியர். இவர் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்தான் தன் அம்மாவுக்கு உணவு கொண்டு வந்த சிறுமி தூரத்தில் நின்று கண்ணீர் வடிக்கிறார்.

மகளை அரவணைக்க முடியாமல் அந்தத் தாயும் கலங்கி நிற்கிறார். அந்தச் சிறுமி கண்ணீரோடு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை வைக்கிறார். அந்த உணவை எடுத்துக்கொண்ட தாய் மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே மருத்துவமனையின் உள்ளே செல்கிறார். இந்தக் காட்சிகள் வீடியோவாக வெளியாக இணையத்தில் நிறைய நபர்களால் ஷேர் செய்யப்பட்டு வருவதுடன் பலரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் உன்னதமான பணி குறித்து இணையத்தில் பேசிவருகின்றனர்.

மக்களுக்கான பணியில் ஈடுபடும் இந்தச் சாமானியர்களே ரியல் ஹீரோக்கள். அந்த வகையில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் குடும்பங்களைத் துறந்து மக்களுக்காக மருத்துவமனையே கதி எனக் கிடந்தது கொரோனா வைரஸ் பணியில் ஈடுபட்டு வரும் சீன செவிலியர்கள் ரியல் ஹீரோக்கள்.

அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

'மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன்!’ - கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்த தம்பதி
அடுத்த கட்டுரைக்கு