Published:Updated:

`விடுமுறை நீட்டிப்பு, வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தல்!'- கொரோனாவால் முடங்கும் ஹூபே மாகாணம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீன பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) முக்கிய நகரமான வுகானுக்கு (Wuhan) சென்று நிலவரத்தை நேரில் பார்வையிட்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சீன அரசு சந்திர புத்தாண்டு (Lunar New Year) விடுமுறையை நீட்டித்துள்ளது. மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க பெரிய வணிக நிறுவனங்களைத் தற்காலிகமாக மூட வேண்டும் என்றும், பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்துகொண்டே தங்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

லீ கெக்கியாங்(Li Keqiang)
லீ கெக்கியாங்(Li Keqiang)

சீன பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) முக்கிய நகரமான வுகானுக்கு (Wuhan) சென்று நிலவரத்தை நேரில் பார்வையிட்டார்.

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா

சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,744 ஆக உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் வுகானை தலைநகரமாகக் கொண்ட ஹூபே (Hubei) மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

உலகெங்கிலும் கொரோனா வைரஸைப் பற்றிய கவலை அதிகரிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட 8 பேரைக் கொண்ட ஹாங்காங், கடந்த 14 நாள்களில் ஹூபேவுக்குச் சென்ற மக்களுக்கு தங்கள் நாட்டில் நுழையத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஹாங்காங்கில் குடியிருப்பவர்களுக்கல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

ஹூபேயில் பரவிவரும் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 56-லிருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்குத் தீவு உட்பட சீனாவின் பிற இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேமிங் நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தங்கள் ஊழியர்களிடம் பிப்ரவரி 7 வரை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா தங்களின் அதிகவிலையிலான பங்குகளைப் பங்குச்சந்தையிலிருந்து நீக்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு