Published:Updated:

`நான்தான் பேசுகிறேன்... மாஸ்க் எங்கே? வீடு திரும்புங்கள்!' - சீனாவைக் கண்காணிக்கும் ட்ரோன்கள் #Video

சீனா
சீனா

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் மாஸ்க் அணிந்து செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவின் பல்வேறு நகரங்கள் முடங்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்கு பொது விடுமுறை நாள்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். அரசாங்கமும் மக்களை மாஸ்க் அணிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது . இதற்கான கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு போலீஸார் ட்ரோன் மூலம் அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்

அந்த வீடியோவில், ”நான்தான் ட்ரோன். உங்களுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மாஸ்க் அணியாமல் நீங்கள் சாலையில் நடந்துசெல்ல முடியாது. நீங்கள், உங்கள் வீட்டுக்குத் திரும்புவதுதான் நல்லது. வீட்டுக்குச் சென்றதும் கைகளை சுத்தமாகக் கழுவுவதற்கு மறவாதீர்கள். மக்களை வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தியுள்ளோம். நீங்கள் வெளியில் செல்கிறீர்கள். ட்ரோன் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. என மூதாட்டி ஒருவரிடம் பேசுகிறார்கள்.

அதேபோல், போக்குவரத்து போலீஸார் சாலையில் செல்பவர்களைக் கண்காணிக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அதில் பெண் போலீஸார் ஒருவர், “உங்கள் மாஸ்க் எங்கே, மாஸ்க்கை கட்டாயம் அணியுங்கள். போனில் பேசிக்கொண்டிருக்கும் அழகான இளைஞரே, மாஸ்க் எங்கே?' எனக் கேட்கிறார். மாஸ்க் அணியாமல் செல்லும் தம்பதியைப் பார்த்து, `நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். கையில் மாஸ்க் வைத்துள்ளீர்கள், அவற்றை அணிந்து செல்லுங்கள். சாலையில் சாப்பிட்டுக்கொண்டே நடைபோடும் அழகான பெண்களே, மாஸ்க்கை அணியுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

இந்த வைரஸ் தாக்குதலினால், சீனாவில் இதுவரை 249 பேர் இறந்துள்ளதாகவும் 9,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா ஷூனிங், ``வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையும் திறனும் சீனாவுக்கு உள்ளது" என்று கூறியுள்ளார். சீன மக்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்.

`மானேசரில் மருத்துவ முகாம்; 14 நாள்கள் கண்காணிப்பு!'- வுஹானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்
அடுத்த கட்டுரைக்கு