Published:Updated:

கோவிட் 19: தீவிர அறிகுறிகள், அதிகரிக்கும் நோய்ப்பரவல்; சீனாவிலும் பரவும் `டெல்டா வேரியன்ட்'

2019-ல் வைரஸின் ஆரம்ப பரவலைக் காட்டிலும் இது மிக ஆபத்தான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் மீண்டும் ஒரு பூதம் கிளம்பியுள்ளது. அதாவது, சீனாவில் இப்போதுள்ள கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் வேகமாகவும் வீரியமாகவும் பரவி வருவதுதான் அது. 2019-ல் வைரஸின் ஆரம்ப பரவலைக் காட்டிலும் இது மிக ஆபத்தான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அறிகுறிகள் தோன்றிய மூன்று முதல் நான்கு நாள்களுக்குள் 12% நோயாளிகள் கடுமையாகவும் மோசமாகவும் நோய்வாய்ப் பட்டுள்ளனர் என்று குவாங்சோ நகரில் உள்ள சன் யாட்-சென் பல்கலைக்கழகப் பராமரிப்பு மருத்துவ இயக்குநர் குவான் சியாங்டாங் கூறியுள்ளார். கடந்த காலத்தில் இந்த விகிதம் 2% அல்லது 3% ஆக மட்டுமே இருந்தது. முன்பு மிக அரிதாகத்தான் 10% வரை இருந்தது என்றும் அவர் கூறினார்.

Chinese Children - Parents
Chinese Children - Parents
AP Photo/Ng Han Guan
3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள்

இப்போது தென்கிழக்கு சீனாவில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு அதிகமாகப் பரவி வருகிறது. 2019-ம் ஆண்டின் இறுதியில் மத்திய நகரமான வுகானில் வைரஸின் ஆரம்ப வடிவம் பரவத் தொடங்கியபோது இருந்த அறிகுறிகளிலிருந்து இவை வேறுபட்டவை. அதோடு, அதிக ஆபத்தானவையும்கூட என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏராளமான நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்; அவர்களின் நிலைமை மிக விரைவாக மோசமடைந்து வருகிறது என்று மருத்துவர்கள் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தனர்.

தொற்று அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் ஐந்தில் நான்கு பங்கினருக்கு ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகளின் உடலில் கண்டறியப்பட்ட வைரஸ் செறிவுகள் முன்பு பார்த்ததைவிட உயர்ந்த அளவுக்கு ஏறி, பின்னர் மெதுவாக மட்டுமே குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் உள்ள மருத்துவர்களும் அந்த நாடுகளில் பரவிய மாறுபாடுகளில் இதேபோன்ற போக்குகளைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், அந்த வகைகளின் தீவிரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனாவிலிருந்து வரும் தகவல்கள் டெல்டாவால் ஏற்படும் ஆபத்துகளின் அறிகுறிகள்தாம். இந்த வைரஸ் திரிபு இந்தியாவில்தான் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak
`ஒலிம்பிக் போட்டிகளால் மற்றொரு வீரியமான வேரியன்ட் உருவாகலாம்!' - புதிய அச்சமும் நிபுணர் விளக்கமும்

இங்கு நோய்ப்பரவல் மற்றும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாக இருந்த டெல்டா, அடுத்து இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருகிறது. இது அதிகமாகத் தொற்றக்கூடியதாக இருப்பதாகவும், இரண்டு டோஸ்களில் ஒன்றை மட்டுமே பெற்ற சிலருக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்றும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்கிழக்கு சீனாவில் டெல்டாவின் பரவல் காரணமாக, இப்போது சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களில் எத்தனை நபர்களுக்கு புதிய தொற்று ஏற்பட்டது என்பதை சீன அதிகாரிகள் வெளியிடவில்லை. செஷெல்ஸ் மற்றும் மங்கோலியா உட்பட சீனத் தடுப்பூசிகள் பரவலான பயன்பாட்டில் உள்ள சில நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல்கள் தொடர்ந்து நடந்தாலும் தொற்றுப் பரவல் குறையவில்லை என்பதுதான் சீனாவில் பிரச்னையாக இருக்கிறது.

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு