Published:Updated:

`உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus

பாட் கான்டெல்
பாட் கான்டெல்

கொரோனாவில் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவைக் கலைஞருமான பாட் கான்டெல் விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சீன அரசு நினைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதையடுத்து சீன அரசு மவுனம் கலைத்தது. மர்மக் காய்ச்சல் குறித்து எச்சரித்த மருத்துவர் ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் முடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் கான்டெல் (Pat Condell) விமர்சித்துள்ளார்.

`லாக்-டவுனில் 19 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்; ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்து!’ #CoronaUpdate

இதுகுறித்து யூடியூபில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``வுகான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுகான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை. மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

சீன அதிபர்
சீன அதிபர்

இதை வுகான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என கான்பியூசிஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு