Published:Updated:

`இதுதான் உண்மையான காதல்!' - கொரோனாவுக்கு எதிராகப் போராடும் வயதான தம்பதி

சீனாவைச் சேர்ந்த வயதான தம்பதி
சீனாவைச் சேர்ந்த வயதான தம்பதி

கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் போராடி வருகிறார்கள் சீனர்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தப் புத்தாண்டு சீனா மக்களை இவ்வளவு மோசமாக வரவேற்கும் என யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் போராடி வருகிறார்கள் சீனர்கள். மருத்துவமனைகளில் இருந்து உடல்நலத்துடன் திரும்பும் ஒவ்வொரு நோயாளிகளும் அந்த நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றனர். ஆபத்து காலத்தில்தான் நல்ல உறவுகளை அடையாளம் காணமுடியும். 60 வயது மகனை பார்த்துக்கொண்ட 90 வயது மூதாட்டி ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் மனங்களை வென்றது. இதேபோன்று ஒரு வயதான தம்பதியின் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வயதான தம்பதியர் இருவர் கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் பக்கத்து பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 87 வயதான கணவர் தன் மனைவி குடிப்பதற்காகப் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். மனைவிக்கு உணவும் அவரே ஊட்டிவிடுகிறார். மனைவிக்குத் தேவையான பணிவிடைகளை அவரே கவனித்துக்கொள்கிறார். இந்த வீடியோவை சீன ஊடகமான `பீப்பிள்ஸ் டெய்லி' தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வயதான தம்பதியர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர். இதுதான் உண்மையான காதல். இதைப் பார்க்க அழகாக இருக்கிறது. அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் எனச் சிலர் பதிவிட்டுள்ளனர்.

மகனுக்காக காத்திருக்கும் 90 வயது தாய்; கண்ணாடி வழியே காதலை பகிரும் ஜோடி!- சீனாவின் நம்பிக்கை #Corona
அடுத்த கட்டுரைக்கு