Published:Updated:

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் - சீனாவில் என்ன நடக்கிறது?

சீனாவில் தீவிரமான கோவிட் (மாதிரிப் படம்)
News
சீனாவில் தீவிரமான கோவிட் (மாதிரிப் படம்)

கோவிட் இறப்புகள் குறித்து சீனா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை, இருந்தபோதும் தகனம் செய்வதற்கான தேவை சீனாவில் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் - சீனாவில் என்ன நடக்கிறது?

கோவிட் இறப்புகள் குறித்து சீனா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை, இருந்தபோதும் தகனம் செய்வதற்கான தேவை சீனாவில் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
சீனாவில் தீவிரமான கோவிட் (மாதிரிப் படம்)
News
சீனாவில் தீவிரமான கோவிட் (மாதிரிப் படம்)

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில மாதங்களிலேயே 2 மில்லியன் கோவிட் மரணங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அங்குள்ள நடைபாதைகளிலும் இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சீனா
சீனா

ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலானவர்களின் பாதிப்பால், மருத்துவமனைகளில் மருந்துகள், அவசரகால மருத்துவத் தேவைகளின் தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

நிலைமையின் தீவிரத்தை அறிந்து, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், சீனாவில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் தினசரி எண்ணிக்கையை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்தது. ஆனால், டிசம்பர் 1 முதல் 20-ம் தேதிக்குள் சீனாவின் 248 மில்லியன் மக்கள், அதாவது 17.65 சதவிகிதத்தினர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவிட் இறப்புகள் குறித்து சீனா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் தகனம் செய்வதற்கான தேவை சீனாவில் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நாள்கள் சீனாவுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது பொதுக் கருத்தை டிசம்பர் 26-ம் தேதி வெளியிட்டுள்ளார். அதில் ``மக்களின் உயிர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சீனாவில் கோவிட் 19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒரு புதிய சூழலை எதிர்கொண்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

மக்களிடையே சுகாதார பிரசாரத்தைத் தொடங்க வேண்டும். தொற்றுநோய்த் தடுப்பு கட்டுப்பாட்டுக்கான சமூகப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மக்களின் உயிர்கள், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

சீன அதிபரின் இந்தக் கருத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலம் என்னவாகும் என்ற கேள்வியை மக்களிடையே விதைத்துள்ளது.