Published:Updated:

`கடுமையான காதுவலி' - மருத்துவரிடம் சென்ற சீன இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

காது வலியால் அவதிப்பட்ட சீன இளைஞரின் காதுகளில் இருந்து கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டுள்ளன.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி

சீனாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் தாங்க முடியாத காது வலியை உணர்ந்தார். இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது காதுக்குள் ஏதோ ஊர்வது போன்ற ஒரு உணர்வுடன்கூடிய வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாகத் தன் குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்த இளைஞரின் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்த்துள்ளனர். காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இளைஞரின் காதுக்குள் இருந்த கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டன.

கரப்பான்
கரப்பான்

இளைஞருக்கு சிகிச்சையளித்த காது மூக்கு தொண்டை நிபுணரான டாக்டர் ஜாங் ஒய்ஜின் கூறுகையில்,``அந்த இளைஞர் தாங்க முடியாத காது வலியுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது காதுக்குள் கரப்பான் பூச்சிகள் இருப்பதைக் கண்டோம். காதுக்குள் கரப்பான் பூச்சிக் குட்டிகள் இங்கும் அங்குமாக ஓடிய வண்ணம் இருந்தன. அவற்றை இடுக்கி ( Tweezer) மூலம் அகற்றினோம். சிகிச்சை முடிந்த அன்றைய தினமே அவர் நலமுடன் வீடு திரும்பினார். அவருக்கு காதுக்கு போட மருந்து கொடுத்துள்ளோம்" என்றார். மேலும் அவர் கூறுகையில், ``பாதி உணவருந்திவிட்டு படுக்கைக்கு அருகில் மீதி உணவை வைத்து இருந்ததுதான் கரப்பான்பூச்சி காதுக்குள் புகக்காரணமாக இருந்திருக்கலாம்" என்றும் தெரிவித்தார். இளைஞரின் காதுக்குள் இருந்து ஏறக்குறைய 10 கரப்பான்பூச்சிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.

Vikatan

இளைஞர் கிச்சை பெற்ற சாங்கி மருத்துவமனையின் ENTபிரிவின் தலைமை மருத்துவரான டாக்டர் Jiang Tengxiang கூறுகையில், ``கரப்பான் பூச்சி பெருக்கத்தைத் தடுக்க வீட்டை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். சாக்கடை தேங்கவிடாமல் சுத்தம் செய்தல், கொசு வலை உபயோகித்தல், ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடுதல் போன்றவற்றைப் பின்பற்றி, பூச்சிகள் வீட்டுக்குள் புகாவண்ணம் பாதுகாப்பது அவசியம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.