Published:Updated:

`நான் வந்துட்டேன்னு சொல்லு...!’ - சீனாவை மீண்டும் மிரட்டத் தொடங்கும் கொரோனா

Corona
Corona

கடந்த இரண்டு வாரங்களாக நோய்ப் பரவல் இல்லாத நிலையில், தற்போது அறிகுறிகள் இல்லாமலே உள்ளூர் பரவல் மூலம் நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது.

சீனாவில் புதிதாக கோவிட்-19 தொற்று சில நாள்களாக யாருக்கும் உறுதிசெய்யப்படாத நிலையில், 16 நபர்களுக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 15 பேருக்குக் கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை. ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த 10 பேர் தற்போது உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus
corona virus

அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் என்பதால், அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,881 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர்களில் 395 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதாரத்துறை கமிஷன் தெரிவித்துள்ளது. இறப்புகளைப் பொறுத்தவரை 4,633 என்ற எண்ணிக்கையே தொடர்கிறது. புதிதாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

 Test
Test

இது தொடர்பாகப் பேசியுள்ள சீனாவின் தேசிய சுகாதாரத்துறை கமிஷனின் செய்தி தொடர்பாளர் மீ பெங், ``கடந்த இரண்டு வாரங்களாக நோய்ப் பரவல் இல்லாத நிலையில், தற்போது அறிகுறிகள் இல்லாமலே உள்ளூர் பரவல் மூலம் நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. இது கொரோனா வைரஸ் இன்னும் சீனாவிலிருந்து முழுமையாகச் சென்றுவிடவில்லை என்பதையும் மீண்டும் நோய் பரவும் அபாயத்தையும் உருவாக்கியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்? - நிபுணர்களின் விளக்கம் 

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த வுஹானில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வரும் நிலையில், ரஷ்யா எல்லையில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணம் கோவிட்-19-க்கான புதிய மையாக உருவெடுத்து வருவது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

test
test

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77,853 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சீன அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு