Published:Updated:

`இத்தாலியில் கியூபா டாக்டர்கள்!' - படிப்படியாகக் குறையும் கொரோனா இறப்பு விகிதம்

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வந்துள்ள கியூபா டாக்டர்கள்
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வந்துள்ள கியூபா டாக்டர்கள்

சாதாரண மக்கள் முதல் உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் வரை கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ.சி.மிலன் அணியின் டெக்னிக்கல் குழுத் தலைவராக உள்ள மால்ட்டினியும் அவரின் மகனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால், இத்தாலி நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 6,000 மக்கள் அங்கே பலியாகியுள்ளனர். இத்தாலி மருத்துவர்களுக்கு உதவி புரியும் வகையில், கியூபா மருத்துவர்களும் இத்தாலி சென்று, கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால், அங்கு படிப்படியாக இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. இத்தாலியில் 21-ம் தேதி 793 பேர் பலியாகினர். தொடர்ந்து 22-ம் தேதி 651 பேரும் 23-ம் தேதி 601 பேரும் இறந்துள்ளனர். அதே போல், கொரோனா தொற்று பரவும் வேகமும் குறையத் தொடங்கியுள்ளது. 22-ம் தேதி 5,560 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 23-ம் தேதி 4,789 என்ற அளவில் புதியவர்களுக்கு கொரோனா தொற்றியிருந்தது.

கொரோனா பாதிப்புக்குள்ளான பாலோ மால்டினி
கொரோனா பாதிப்புக்குள்ளான பாலோ மால்டினி

கிட்டத்தட்ட இது 700 குறைவு ஆகும். தற்போது வரை, இத்தாலியில் 50,138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பேஷன் நகரமாகக் கருதப்படும் லேம்பர்டி மாகாணத் தலைநகரான மிலன் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஏ.சி.மிலன் அணியின் முன்னாள் கேப்டன் பாலோ மால்டினி அவரின் மகன் டேனியல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உள்ளது. சாதாரண மக்கள் முதல் உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் வரை கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஏ.சி.மிலன் அணியின் டெக்னிக்கல் குழுத் தலைவராக உள்ள மால்ட்டினியும் அவரின் மகனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

படிப்படியாக இறப்புவிகிதம் குறைந்து வருவதால், இத்தாலி மருத்துவத்துறை சற்று ஊக்கமடைந்துள்ளது. இதனால், லேம்பர்டி மாகாண மருத்துவத்துறைத் தலைவர் ஜீயிலோ கல்லேரா தொலைக்காட்சியில் தோன்றி சற்று உற்சாகத்துடன் பேசினார். அப்போது, `தற்போதைய நிலையில் இது வெற்றி என்று சொல்லி விட முடியாது' என்று அவர் குறிப்பிட்டார். கியூபா மருத்துவர்களும் இத்தாலி சென்றுள்ளதால், இத்தாலி மருத்துவர்களுக்கு புதிய உதவி கிடைத்துள்ளது.

வெறிச்சேடிய இத்தாலி
வெறிச்சேடிய இத்தாலி

இதற்காக, கியூபாவிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் 50 பேர் அடங்கிய குழு மிலன் சென்றுள்ளது. இத்தாலி நாடு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் வெளியே வந்தால் மக்கள் கைது செய்யப்படுகின்றனர்.

மக்கள் ஊரடங்கு... எப்படி இருந்தது சென்னை... விகடன் ரவுண்ட் அப்!

வருகிற மே 31-ம் தேதி போப் பிரான்ஸிஸ், மால்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு