Published:Updated:

தெரிந்தே கோவிட் நோய்த்தொற்றுக்கு ஆளான பாடகி; உடல்நலம் குன்றி உயிரிழப்பு!

ஹானா ஹோர்கா ( Facebook Photo )

ஹானா ஹோர்காவின் மரணம் குறித்துப் பேசியுள்ள அவரது மகன் ரெக், ``என் அம்மா உயிரிழந்ததற்கு தடுப்பூசி எதிர்ப்பாளர்களே காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததைப் புனிதப்படுத்தியதால் என் அம்மாவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தெரிந்தே கோவிட் நோய்த்தொற்றுக்கு ஆளான பாடகி; உடல்நலம் குன்றி உயிரிழப்பு!

ஹானா ஹோர்காவின் மரணம் குறித்துப் பேசியுள்ள அவரது மகன் ரெக், ``என் அம்மா உயிரிழந்ததற்கு தடுப்பூசி எதிர்ப்பாளர்களே காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததைப் புனிதப்படுத்தியதால் என் அம்மாவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஹானா ஹோர்கா ( Facebook Photo )

கோவிட்-19 தொற்றுக்கு கடந்த ஆண்டு முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்துவதில் உடன்பாடில்லாதவர்கள் பலர் இதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை உடைய பாடகி ஒருவர் தாமாக கொரோனா வைரஸுக்கு வெளிப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பாடகி ஹானா ஹோர்கா. கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் முழக்கத்தால் ஈர்கப்பட்ட ஹானா ஹோர்கா, கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்வதைவிட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் உருவாகும் இயற்கையான எதிர்ப்பாற்றலைப் பெற விரும்பியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், ஹானா ஹோர்காவின் கணவருக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அவர்களுடன் இயல்பாக இயங்கி வந்துள்ளார். இதனையடுத்து ஹானா ஹோர்காவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால், கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாகி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

தாயின் மரணம் குறித்துப் பேசியுள்ள மகன் ரெக், ``என் அம்மா உயிரிழந்ததற்கு தடுப்பூசி எதிர்ப்பாளர்களே காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததைப் புனிதப்படுத்தியதால் என் அம்மாவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஹானா ஹோர்கா
ஹானா ஹோர்கா
Facebook Photo

57 வயதான ஹானா ஹோர்கா, செக் குடியரசு நாட்டின் கிராமியப் பாடகர் ஆவார். இவர் அசோனான்ஸ் என்ற கிராமிய இசைக்குழுவில் இயங்கி வந்தார். ஐரோப்பிய நாட்டின் புகழ்பெற்ற இசையான செல்டிக்குப் பெயர் பெற்றது அசோனான்ஸ் இசைக்குழு. அந்தக் குழுவில்தான் இணைந்து பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார் ஹானா ஹோர்கா என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism