Published:Updated:

`இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரிக்கும்!’ - கொரோனாவால் கலங்கும் ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

நியூயார்க்கில், 1,000 படுக்கைகள் கொண்ட நான்கு அவசரகால மருத்துவ மையங்களை அமைக்கவும், கலிஃபோர்னியாவில், 2,000 படுக்கைகள் கொண்ட, எட்டு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. இதுவரையில் அமெரிக்காவில், 34, பேருக்கு கொரோனா ந் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 419 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

கலிஃபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு அரசு நிலைகுலைந்து நிற்கிறது. அதிபர் ட்ரம்ப், `நாம் மோசமான கட்டத்தில் இருக்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது.

கொரோனா
கொரோனா

சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீனாவில் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் 34,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை, 419 பேர், இந்த நோயால் இறந்துள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி கென்டகி ராண்ட் பாலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிபர் டிரம்ப்
அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம், ``நியூயார்க், வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகியவை கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நியூயார்க்கில், 15,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 114 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்த பாதிப்பை சரிசெய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நியூயார்க்கிற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் கைவசம் இருக்கிறது. அவற்றை மற்ற பகுதிகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும். குறிப்பாக, முகக்கவசம், கவுன், கையுறைகள் ஆகியவற்றை போதுமான அளவில் அனுப்பிவைக்க, முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நியூயார்க்கில், 1,000 படுக்கைகள் கொண்ட நான்கு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும், கலிஃபோர்னியாவில், 2,000 படுக்கைகள் கொண்ட, எட்டு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா

நியூயார்க்கில் தேசிய பாதுகாப்புப் படையினரையும் அவசர கால பணிகளில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில், கடல் பகுதிகளில், இரண்டு போர்க் கப்பல்கள், அவசர கால மருத்துவ மையங்களாக செயல்படுகின்றன. மக்களே, நாம் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். எங்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு