Election bannerElection banner
Published:Updated:

கொரோனா விழிப்புணர்வு நிகழ்வாக மாறிய 95 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா! #ViralVideo

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம் ( instagram )

கொரோனா வைரஸ் காராணமாக எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூட முடியவில்லை.

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும், பிறரைச் சந்திக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் 95 வயது பாட்டிக்கு அவரின் குடும்பத்தினர் புதுவிதமாகக் கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ, சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

`தாத்தா பக்கத்துல இருந்தும், கண்ணாடி வழியாகச் சொன்னேன்' -பெண்ணின் நிச்சயதார்த்தமும் வைரல் போட்டோவும்
Representational Image
Representational Image

நியூயார்க்கைச் சேர்ந்தவர் சாரா பைனி. இவர் தன்னுடைய பாட்டி கேத்லினின் பிறந்தநாள் விழாவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக எல்லாரும் ஒன்றாக ஒரே இடத்தில் கூட இயலாத சூழல் ஏற்பட்டது. எனினும் தன்னுடைய பாட்டியின் 95 வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாட விரும்பி சாரா, வித்தியாசமாகத் திட்டமிட்டிருக்கிறார்.

தன்னுடைய இஸ்டாகிராம் பக்கத்தில் சாரா வெளியிட்ட வீடியோவில், சாரா உட்பட 95 வயது கேத்லினின் பேரன், பேத்திகள், மகன் உள்ளிட்டோர் கேத்லினின் வீட்டு வாசலிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் வரிசையாக இடைவெளிவிட்டு நின்று கொண்டு, சத்தமாக கேத்லினை அழைக்கிறார்கள். தள்ளாடியவாறே தன்னுடைய அறைக்கு வெளியே வந்து நிற்கிறார் கேத்லின்.

கேத்லின்
கேத்லின்
instagram

உடனே ஒவ்வொருவரும் தன் கையில் வைத்திருந்த பலூன், வாழ்த்து அட்டை, கேக் போன்றவற்றைக் காண்பித்து பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடுகின்றனர். நெகிழ்ச்சியில் கேத்லின் கண்கலங்குவதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.

இது குறித்து சாரா அளித்துள்ள பேட்டியில் ``எங்களின் பாட்டி எங்களுக்காக எத்தனையோ நன்மைகள் செய்திருக்கிறார். அவங்களுக்கு இப்போ 95 வயது. உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவரின் பிறந்தநாள் விழாவை எல்லாரும் ஒரே இடத்தில் கூடிக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

கொண்டாட்டங்களை விட ஆரோக்கியம் முக்கியம். ஆனாலும் எங்கள் பாட்டி எங்கள் எல்லோருடைய வருகையையும் எதிர்பார்ப்பார். அதனால்தான் வீட்டுக்கு வெளியே இருந்து எல்லாரும் பார்க்கும்படி வாழ்த்துகள் சொல்லி பிறந்தநாளைக் கொண்டாடினோம். பாட்டி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். இது பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதைத் தாண்டி, மற்றவர்களுக்குமான விழிப்புணர்வாகவும் அமைந்தது. நம்முடைய நலனுடன் பிறருடைய நலனும் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு