Published:Updated:

`தனிமைப்படுத்துதல் மட்டும் போதுமா?’ - உலக நாடுகளுக்கு WHO அறிவுரை #Corona

டெட்ரோஸ்
டெட்ரோஸ் ( AP )

`ஊரடங்கு உத்தரவை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால், அது மட்டும் தீர்வாகாது.'

சீனாவில் தொடங்கிய கொரோனோ இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், பல நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு தீர்வாக எந்த மருந்தும் கண்டறியப்படாத நிலையில், உலக நாடுகள் மக்களைப் பாதுகாக்க மாவட்டங்களைத் தனிமைப்படுத்துவது, ஊரடங்கு உத்தரவு போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மருத்துவரும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநருமான டெட்ராஸ் அதோனம், ``ஊரடங்கு உத்தரவைப் பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால், அது மட்டும் தீர்வாகாது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுவரை கொரொனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும். எல்லோரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்புகொண்டார்களோ அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். இதையெல்லாம்விட முக்கியமாக எல்லா நாடுகளும் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். இது மட்டுமே கொரோனாவை அடியோடு அழித்து மக்களைக் காக்க நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு டயட் மெனு என்ன தெரியுமா? நம்பமாட்டீங்க!

மக்கள் எல்லோருமே கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்யுங்கள். உங்களின் முன்னெச்சரிக்கை பல்வேறு உயிர்களைக் காக்கும். விழிப்புடன் இருப்போம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு