Published:Updated:

`முழு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இனி மாஸ்க் வேண்டாம்!' - அமெரிக்காவில் தளர்வு

``முழு தடுப்பூசி (இரண்டு டோஸ்களும்) எடுத்துக்கொண்டவர்களுக்கு வெளி இடங்களில் முகக்கவசம் தேவையில்லை" என அமெரிக்கா அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்றும், சிறு குடும்பத்தினருடன் குழுக்களாகக் கூடும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

face mask
face mask
AP Photo/Alberto Pezzali

ஆனால், சலூன் கடைகள், அருங்காட்சியகம், சினிமா திரையரங்கம் போன்ற அறிமுகமற்ற நபர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என்றும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை அமெரிக்க மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

மேலும், நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் ரோசெல் வலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் பாதுகாப்புடன், கூட்டத்தில் பங்கேற்பது நண்பர்களுடன் உணவகத்தில் உணவு அருந்துவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்கும் கூட்டத்தில் முகக்கவசம் அணிய அவசியமில்லை. அதிக அளவில் மக்கள் இருக்கும் இடங்களில் மட்டும் அணிந்தால் போதும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு