Election bannerElection banner
Published:Updated:

`இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை’ - ஸ்காட்லாந்து பெண்ணின் வாழ்வை மாற்றிய புகைப்படம்!

மார்பகப்  புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண் புகைப்படம் எடுத்த போது எதேச்சையாக ஒரு விஷயத்தை கவனித்துள்ளார். அந்த புகைப்படம் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த 41 வயது பெண் பேல் கில், கடந்த மே மாதம் எடின்பர்க் நகரில் உள்ள கேமரா ஆப்ஸ்க்யூரா அருங்காட்சியகத்துக்கு சென்றார். இதன் நினைவாக தெர்மல் கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் உடலில் அதிக வெப்பமான பகுதிகளை குறிக்கும் வகையில் சிவப்பாக பதிவாகியிருந்தது. அவரது மார்ப்பக பகுதியில் சிவப்பாக இருந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் தேடிய பேல் கில்லுக்கு இந்த குறியீடுகள் மார்பக புற்றுநோயை குறிக்கும் வகையில் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய்

பேல் கில் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் தொடக்க நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த புகைப்படம் என்னுடைய வாழ்க்கையே மாற்றியுள்ளது என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.

Vikatan

இதுகுறித்து பேசியுள்ள பேல் கில், ``பள்ளி விடுமுறையை என்பதால் குடும்பத்தினருடன் மே மாதம் சென்றோம். தெர்மல் கேமராவில் நாங்கள் அனைவரும் கைகளை ஆட்டியவாறு புகைப்படங்களை எடுத்தோம். அப்போது எனது இடது மார்பகத்தில் வெப்பமான குறியீடுகளை கண்டேன். எல்லோரும் தான் படம் எடுத்தோம். என்னுடைய படத்தில் மட்டுமே இப்படி இருந்தது. வீட்டிற்கு வந்த சில நாள்களுக்கு பின்னர் அந்த புகைப்படங்களை பார்க்க நேர்ந்தது. உடனே கூகுளில் இதுகுறித்து தேடினேன். நிறைய கட்டுரைகள் மார்பக புற்றுநோயை குறிக்கும் வகையில் இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. உடனடியாக மருத்துவரை தொடர்புக்கொண்டு ஆலோசனை மேற்கொண்டேன். மார்பக புற்றுநோய் ஆரம்பநிலையில் இருப்பதாகக் கூறினர்.

புற்றுநோய்
புற்றுநோய்

தற்போது இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளேன். ஒரு அறுவை சிகிச்சை நோயில் இருந்து காத்துக்கொள்வதற்காக மற்றொன்று நோய் பரவாமல் தடுப்பதற்காக செய்யப்பட்டது. நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த கேமரா மட்டும் இல்லையென்றால் எனக்கு கேன்சர் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த கேமரா புற்றுநோயை கண்டுபிடிக்காது என எனக்கு தெரியும். உண்மையில் இது என் வாழ்க்கையை மாற்றிய படம். என்னால் இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு