Published:Updated:

கொரோனா... வளைக்கும் வைரஸ் டிராகன்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத் தொடங்கியது நாவல் கொரோனா வைரஸ்.

கொரோனா... வளைக்கும் வைரஸ் டிராகன்!

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத் தொடங்கியது நாவல் கொரோனா வைரஸ்.

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

சீனாவிலிருந்து உலகுக்கு!

கொரோனா வைரஸ்!

இந்தப் பெயர் பெருஞ்சுவராக எழுந்து சீனாவுக்கும் உலக நாடுகளுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுக்க இதுவரை 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொரோனா வைரஸ், ‘கொரோனாவிரிடே’ என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இது, மெர்ஸ்(MERS - Middle East Respiratory Syndrome), சார்ஸ்(SARS - Severe Acute Respiratory Syndrome) போன்ற மற்ற கொரோனா வைரஸ்களைப்போல தீவிர சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உயிரிழப்புவரை ஏற்படலாம். தற்போது சீனாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் இதற்கு முன் மனிதர்களால் அடையாளம் காணப்படாத புதிய வைரஸ். அதைக் குறிக்கும் விதத்தில் நாவல் கொரோனா வைரஸ்(Novel Corona Virus - nCoV) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் எல்லாம் விலங்குகளிடமிருந்தே பரவியவை. அதனால் இவை ஜூனோடிக்(Zoonotic) என்று அழைக்கப்படுகின்றன. ‘சார்ஸ்’ 2002-ம் ஆண்டில் சீனாவில் புனுகுப் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, 29 நாடுகளில் 8,098 பேரை பாதித்து, 774 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது; ‘மெர்ஸ்’ 2012-ல் சவுதி அரேபியாவில் ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, 27 நாடுகளில் 2,494 பேரை பாதித்து, 858 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீன அரசு தவறியது எங்கே?

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத் தொடங்கியது நாவல் கொரோனா வைரஸ். இது, பாம்பு போன்ற விலங்கு களிடமிருந்து மனிதனுக்குத் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் தொடங்கி இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் என 27 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கொரோனா வைரஸின் பாதிப்பை, சீனா ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்திருக்க வேண்டும் என்று உலகம் முழுக்கவிருந்து குரல்கள் எழுகின்றன. டிசம்பர் மாதத்தில் வூகான் மாகாணத்தில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏழு நோயாளிகள் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இது அசாதாரணமாகத் தோன்றவே, அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர், டிசம்பர் 30-ம் தேதி, மருத்துவர்களுக்கான இணையதள சாட் குரூப் ஒன்றில் இந்தத் தகவலைப் பதிவு செய்தார். ‘அச்சுறுத்தும் தகவல்’ என்றும் ‘ ‘சார்ஸ்’ நோய் மீண்டும் வந்துவிட்டதா?’ என்றும் மருத்துவர்களுக்கிடையே இதுகுறித்துக் கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. மருத்துவர்கள் வட்டத்துக்கு வெளியேயும் இந்தத் தகவலை அளித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

கொரோனா
கொரோனா

இதையடுத்து, நோய் குறித்த தகவலைப் பரப்பியதற்காக அன்றைய தினம் இரவே அந்த மருத்துவருக்கு சம்மன் வழங்கினார்கள் வூகான் மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள். போலீஸிலும் புகார் அளிக்கப்பட, ‘நான் செய்தது சட்டவிரோதமான செயல்’ என்ற அறிக்கையில் அந்த மருத்துவரைக் கட்டாயப்படுத்திக் கையெழுத்திட வைத்தது காவல்துறை. மேலும், மருத்துவர் மூலம் பரவிய இந்தத் தகவலை மறுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை ‘பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று ஓர் அறிக்கை வெளியிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வதேச மருத்துவ அவசரநிலை அறிவிப்பு!

நோய் பரவுவது தெரிந்தால் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல்ரீதியாகவும் பதற்றம் ஏற்படும் என்பதால் அதை மறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது சீன அரசு. வூகான் மாகாணத்தில் உள்ள விலங்குகள் மொத்த விற்பனைச் சந்தையிலிருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அது மூடப்பட்டாலும், `சீரமைப்புப் பணிகளுக்காகவே சந்தை மூடப்பட்டது’ என்று அறிவிக்கப்பட்டது. வூகான் மாகாண மருத்துவர்களையும் மௌனமாக்கியது அரசு. மக்களிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டு ஏழு வாரங்கள்வரை இது தொடர்பான தகவல்களை வெளியே கசியாமல் பார்த்துக்கொண்டது சீன அரசு. அந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வூகான் மாகாணத்தில் வசிக்கும் 1.1 கோடி மக்கள், நோய்ப் பரவல் பற்றி அறியாததால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக் கையையும் மேற்கொள்ளவில்லை. ஏழு வாரங்களுக்குப் பிறகு, நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது, ஊடகங்கள் மூலம் வெளிவரத் தொடங்கியபோது தான். நோய்த் தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் பாதிக்கப் பட்டோருக்கான பிரத்யேக சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது சீனாவின் ஆளும் கட்சி. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் பரவத் தொடங்கிய நோய்க்கு ஜனவரி 20-ம் தேதியிலிருந்துதான் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியது சீன அரசு. அதற்குள் நோயின் தீவிரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.

கொரோனா
கொரோனா

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உறுதிசெய்யப்பட, ஜனவரி 31-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘சர்வதேச மருத்துவ அவசரநிலை’ எனப் பிரகடனப்படுத்தியது. இஸ்ரேலில், சீன விமானப் போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. ரஷ்யா, சீனா இடையிலான 4,300 கி.மீ எல்லை மூடப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினி நாட்டில், ஆசியாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தடை செய்யப் பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து இரண்டு ஏர் இந்திய விமானங்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு வசித்துவந்த 647 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப் பட்டனர். நோய்ப் பரவலைத் தடுக்க, சீனாவில் வூகான் உள்ளிட்ட 12 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. வூகானில் கொரோனா நோயாளிகளுக்கான பிரத்யேக புதிய மருத்துவமனையை, பத்தே நாள்களில் கட்டிமுடித்துள்ளது சீனா.

பயோ ஆயுதம்?!

‘சீனாவின் வூகான் மாகாணத்தில் செயல்படும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் கொரோனோ வைரஸை பயோ ஆயுதப் போரின்போது பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. அதிலிருந்துதான் இந்த வைரஸ் வெளியே பரவியிருக்க வேண்டும்’ என்ற செய்தி ஒன்று உலவியது. ஆனால் இதைப் பல்வேறு நோய்த்தொற்றியல் ஆய்வாளர்களும் உயிரியல் போர் உத்தி நிபுணர்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேதி வாரியாக அனுமதிக்கப்பட்ட முதல் 10 நோயாளிகளின் மரபணு மாதிரிகளைப் பரிசோதித்தபோது, அனைவருக்கும் பரவியிருந்த வைரஸின் மரபணு 99.98 சதவிகிதம் ஒத்துப்போனது. வேறு வேறு பகுதிகளிலிருந்து தனித்தனியாக இந்த வைரஸ் பரவியிருந்தால், அதன் மாதிரிகளில் இவ்வளவு ஒற்றுமை இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்து, கொரோனா பயோ ஆயுதம் அல்ல என்று மறுத்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 27 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இதுவரை, கேரளாவில் மூன்று பேருக்கு இந்நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும் விமானநிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. நோய்த் தாக்குதலால் ஏற்படக்கூடிய அறிகுறி களுக்கு மட்டுமே சிகிச்சையளிக் கப்படுகிறது. இந்நோய் வராமல் பாதுகாப்பதற்கான தடுப்பூசியைக் கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். என்றாலும், அறிகுறிகள் தென்பட்ட உடனே சிகிச்சையளித்துவிட்டால் நிச்சயம் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 486 பேர் முழுமையாக அதிலிருந்து மீண்டிருப்பதே அதற்கு ஆதாரம்.

கொரோனா... வளைக்கும் வைரஸ் டிராகன்!

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சரிசமமான பங்கு உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், உடனடி சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, நோயின் தீவிரம் குறித்த உண்மையை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை அரசின் கடமைகளாக இருப்பது போன்று, தனி மனித மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் பேணுவதன் மூலம் கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பொதுமக்களின் கடமை.

நோய்த்தடுப்பு வழிகள்!

  • ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 15 முறை கைகளைக் கழுவ வேண்டும்.

  • சளி, இருமல் பிரச்னை உள்ளவர்களோடு நெருங்கிப் பழகக்கூடாது.

  • இருமல், தும்மலின்போது மூக்கு மற்றும் வாயை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கொண்டு மூடிக்கொள்ளவும்.

  • அசைவ உணவுகளை நன்கு சுத்தப்படுத்தி, வேகவைக்க வேண்டும்.

  • வனவிலங்குகள், பண்ணை விலங்குகளை நேரடியாகப் பராமரிப்பதைத் தவிர்க்கவும்.

கிண்டல்கள் வேண்டாம் ப்ளீஸ்!

கொரோனா வைரஸ் விலங்குகளிலிருந்து பரவுவது குறித்த வதந்திகள் சீனாவில் பரப்பப்பட,  வளர்ப்பு நாய்கள், பூனைகள் பல வீடுகளிலிருந்து தூக்கிவீசப்பட்டு நிராதரவாக்கப்பட்டன. சில கொல்லப்பட்டன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான வௌவால்கள் அழிக்கப்பட்டன. உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மற்றும் வதந்திகளால் விலங்குகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது குறித்துச் சூழலியலாளர்கள் ஆதங்கக்குரல் எழுப்பிவருகின்றனர்.

பெண் ஒருவர் வௌவால் சூப் சாப்பிடும் வீடியோ வைரலாக, சீனர்களின் உணவுப்பழக்கத்தை ஏளனம் செய்யும் மனநிலை, கொரோனாவைவிட வேகமாக உலகம் முழுக்கப் பரவியது. உண்மையில், அந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது அல்ல. ஆன்லைன் ட்ராவல் ஷோ ஒன்றுக்காக, பசிபிக் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்றாலும், ‘புழு, பூச்சிவரை எதையும் விடாமல் தின்று உலகத்துக்கு நோயைக் கொடுக்கிறார்கள் சீனர்கள்’ என சீனர்களுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலையும், அவர்களின் உணவுப் பழக்கத்தை கேலி செய்யும் ட்ரோல்களும் எழுந்தன. ‘ஒரு நாட்டின் மக்கள் மிகக் கொடூரமான நோயின் பிடியில் சிக்கியிருக்கும்போது, அவர்களைக் கேலி செய்வது நாகரிகமல்ல, மனிதத்தன்மையுமல்ல ‘ என்று பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் இருந்தால்கூட நோய்த்தொற்று ஏற்படும் என்ற நிலையில், அந்நோயாளிகளுக்கு சிகிக்சையளிக்கும் மருத்துவர்களுக்கு இது பெரிய சவாலாக இருந்துவருகிறது.  எனினும், எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வைரஸ்  தொற்று ஏற்படலாம், மரணம்வரை செல்லலாம் என்று அறிந்தும், சீனாவில் மருத்துவர்கள் பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அவர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்த புகைப்படம், உலகெங்கும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த சீன மருத்துவர் லியாங் வுடாங், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்தது உலக மக்களை வருந்தச்செய்தது. இதற்கிடையே, சீனாவிலிருந்த இந்தியர்களை அழைத்துவர அனுப்பப்பட்ட ஏர் இந்திய விமானங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த மீட்பு நடவடிக்கைக்குச் சென்றுவந்த மருத்துவர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் குவிந்தன.

கொரோனா
கொரோனா

கொரோனா அறிகுறிகள்

காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வறட்சி , மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, நெஞ்சுப்பகுதியில் இறுக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, நிமோனியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism