Published:Updated:

`போர் நடக்கும்போது பின்வாங்குவதா?; கொரோனாவுக்கு எதிரான இந்தியரின் போராட்டம்’ - குவியும் பாராட்டுகள்

இந்திய மருத்துவர்
இந்திய மருத்துவர்

சீனாவில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

`நாட்டில் போர் நடக்கும்போது தைரியமான வீரன் பின்வாங்குவானா?.. நான் மட்டும் எப்படி பின்வாங்குவேன்’ எனத் தன் தாய்க்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு சீனாவில் தங்கி மருத்துவம் பார்க்கும் இந்தியர் பற்றித்தான் கடந்த சில நாள்களாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

கொரோனா
கொரோனா

சீனாவின் வுகான் மாகாணம் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் சொர்க்கபூரி என்றுதான் கூற வேண்டும். ஏராளமான மருத்துவக் கல்லூரிகள், கட்டணமும் குறைவு என்பதால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வுகானுக்குப் படையெடுக்கிறார்கள். கொரோனோ வைரஸ் இந்த வுகான் மாகாணத்தில்தான் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனோ வைரஸ் தாக்கம் சீனர்களை அச்சமடையச் செய்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட சீனாவிலிருந்து 400க்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். சிலர் சீனாவிலே இருப்பதாகக் கூறிவிட்டனர். சீனாவில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

`மூச்சை நிறுத்திக்கொள்கிறேன்; செவிலியரின் சோகமான பதிவு' - சீனா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அமிஷ் வியாஸ் 2014-ம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக சீனா சென்றுள்ளார். தற்போது அவர் பிளாஸ்டிக் சர்ஜனாகப் (plastic surgeon) பணியாற்றி வருகிறார். சீனாவின் Hangzhou நகரத்தில் தன் மனைவி மற்றும் மகளுடன் வசித்துவருகிறார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா திரும்பிவருமாறு அவரது தாய் அழைத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்க மறுத்த அமிஷ் சீனாவில் தங்கி பணியாற்றவுள்ளதாகக் கூறியுள்ளார்.

மருத்துவர் அமிஷ்
மருத்துவர் அமிஷ்

இதுகுறித்து பேசிய அமிஷ்’ “நான் பிளாஸ்டிக் சர்ஜனா இங்கு பணியாற்றி வருகிறேன். ஒரு மருத்துவராக எந்த நோய் தொற்று குறித்தும் நான் பயப்படவில்லை. நாங்கள் இங்கு ஒரு குழுவாகப் பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து பணியாற்றவே விரும்புவதாக” அவர் தெரிவித்துள்ளார்.

`என் மூலமாக வைரஸ் பரவுவதை விரும்பவில்லை!’- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட  ஆப்பிரிக்க இளைஞர்

மத்தியப்பிரதேசத்தில் வசிக்கும் அவரது தாய் கவிதா பேசுகையில், ``நான் என் மகனுடன் தினமும் உரையாடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இங்கிருந்து அவனுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. நான் இங்கு குழப்பத்தில் இருக்கிறேன். மருத்துவராக வேண்டும் என்பது என் பையனுடைய வேட்கை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் சத்தியம் செய்துள்ளான். இந்தியா வருமாறு நான் அவனைக் கேட்டுக்கொண்டேன். நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் போது தைரியமான படைவீரன் பின்வாங்குவானா?. அவனது இந்தக் கேள்வி என்னை வாயடைக்கச் செய்துவிட்டது” என்கிறார். அமிஷ் வியாஸ் சேவையை அந்நாட்டு மக்கள் மனதார பாராட்டியுள்ளனர்.

சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக சேவையாற்றும் அமிஷ் வியாஸ் போன்றவர்களே ரியல் ஹீரோக்கள்.

அடுத்த கட்டுரைக்கு