Published:Updated:

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

sperm ( pixabay )

விந்தணுக்களின் எண்ணிக்கை வெறும் கருவுறுதலை மட்டுமல்ல; ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. ஆண்கள் குறைவான அளவு விந்தணுக்களைக் கொண்டிருப்பது நாள்பட்ட நோய், டெஸ்டிகுலார் புற்றுநோய் மற்றும் குறுகிய ஆயுட்காலம் போன்ற ஆபத்துகளுடன் தொடர்புடையது.

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

விந்தணுக்களின் எண்ணிக்கை வெறும் கருவுறுதலை மட்டுமல்ல; ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. ஆண்கள் குறைவான அளவு விந்தணுக்களைக் கொண்டிருப்பது நாள்பட்ட நோய், டெஸ்டிகுலார் புற்றுநோய் மற்றும் குறுகிய ஆயுட்காலம் போன்ற ஆபத்துகளுடன் தொடர்புடையது.

Published:Updated:
sperm ( pixabay )

`உலகின் பல நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது' எனச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
pixabay

அதன்படி, `விந்தணுக்களின் எண்ணிக்கை வெறும் கருவுறுதலை மட்டுமல்ல; ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. ஆண்கள் குறைவான அளவு விந்தணுக்களைக் கொண்டிருப்பது நாள்பட்ட நோய், டெஸ்டிகுலார் புற்றுநோய் மற்றும் குறுகிய ஆயுட்காலம் போன்ற ஆபத்துகளுடன் தொடர்புடையது. இந்த சரிவு நவீன சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழ்க்கை முறை நெருக்கடிகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

சுமார் 53 நாடுகளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு குறித்த விவரங்கள், Human Reproduction Update நாளிதழில் வெளியிடப்பட்டது. அதாவது, முன்னர் ஆய்வு செய்யப்படாத பிராந்தியங்களான தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறித்து ஏழு வருட (2011 - 2918) கூடுதல் தரவை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது. 

ஆய்வு தகவலின்படி... 

* முதன்முறையாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், முன்னர் காணப்பட்ட மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை (Total sperm count) மற்றும் விந்தணு செறிவை (Sperm Concentration) விட, தற்போது ஒரு குறிப்பிட்ட அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

* 2000-ம் ஆண்டின் பிந்தைய காலகட்டத்தில் இருந்து விந்தணு எண்ணிக்கையில் ஒரு விரைவான சரிவைக் காட்டுகிறது.

* இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மிகப்பெரிய வலுவான சரிவை அடைந்துள்ளது. 

விந்தணு
விந்தணு
மாதிரிப்படம்

இது குறித்து இஸ்ரேல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹக்காய் லெவின் கூறுகையில், ``ஒட்டுமொத்தமாக உலக அளவில் கடந்த 46 ஆண்டுகளில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விந்தணு சரிவை நாங்கள் கண்டோம். இன்னும் இந்த சரிவு சமீப ஆண்டுகளில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய ஆய்வில், விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை. இருந்தபோதும் விந்தணு எண்ணிக்கை குறைவது இனப்பெருக்க மண்டலத்தின் குறைபாடுகள், கருவுறுதலில் உள்ள குறைபாடுகளோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

ஒரு தீவிரமான பிரச்னை நம்முடைய கைகளில் உள்ளது, இவை தீர்க்கப்படாதபட்சத்தில், மனித இனத்தின் வாழ்வையே அச்சுறுத்தும்.

இதிலிருந்து மீள மனிதனுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.