Published:Updated:

கோவிட் -19: இந்தோனேசியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் உயிரிழப்பு; உண்மையாகிறதா வல்லுநர்களின் கணிப்பு?

உலக அளவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதில் 12.5 சதவிகிதத்தினர் குழந்தைகள்தாம் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்பதற்குத் தெளிவான விடை கிடைக்காத நிலையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மீண்டும் அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளன. உலக அளவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதில் 12.5 சதவிகிதத்தினர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

West Java, Indonesia
West Java, Indonesia
AP Photo/Achmad Ibrahim
கொரோனா: 10 மடங்கு அதிகரித்த ஆக்ஸிஜன் விலை; சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு; திணறும் இந்தோனேசியா!

கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு நாளில் மட்டும் 1,566 பேர் இந்தோனேசியாவில் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளில் குழந்தைகள் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்திருப்பது அந்தக் கணிப்பையே நினைவூட்டுகிறது.

இந்தோனேசியா கிராமப் பகுதிகள் அதிகமுள்ள நாடு என்பதால் போதிய மருத்துவ வசதிகள் எதுவும் கிடைக்காமல் ஏற்கெனவே அங்கு மக்கள் அல்லல்பட்டு வந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட, அவர்களுக்குக்கூட சிகிச்சை அளிப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே இன்னும் அங்கு தொடர்கிறது. அதனாலேயே, இதுவரை 545-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தோனேசியாவில் உயிரிழந்துள்ளனர். இப்படியாக, ஏற்கெனவே இந்தோனேசியா மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் சூழலில்தான் குழந்தைகள் அதிக அளவில் இறந்துவரும் அபாயம் அங்கு அதிகரித்திருக்கிறது.

குழந்தை -Representational image
குழந்தை -Representational image
மூன்றாம் அலை அச்சம்: குழந்தைகளின் எதிர்ப்பாற்றலை எப்படி அதிகப்படுத்தலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!

இந்நிலையில், இந்தோனேசியாவில் நிகழும் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் டெல்டா வகை வைரஸ்தான் எனத் தற்போது பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அங்கு அதிக அளவிலான குழந்தைகள் மரணங்கள் நிகழ்வது மற்ற நாடுகளும் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு