Published:Updated:

1,500 கொடிய கிருமிகள் - வுகான் வைரலாஜி மையத்தின் மர்மம்: சீனாவுக்கெதிராக சி.ஐ.ஏ-வை ஏவிய அமெரிக்கா!

வுகான் கிருமியியல் ஆய்வு மையம்

வுகான் கிருமியியல் ஆய்வு மையம் பி.எஸ்.எல் -4 வகையைச் சார்ந்தது. உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளான சார்ஸ், எபோலா உள்ளிட்டவை பற்றி இங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்துவந்துள்ளன.

1,500 கொடிய கிருமிகள் - வுகான் வைரலாஜி மையத்தின் மர்மம்: சீனாவுக்கெதிராக சி.ஐ.ஏ-வை ஏவிய அமெரிக்கா!

வுகான் கிருமியியல் ஆய்வு மையம் பி.எஸ்.எல் -4 வகையைச் சார்ந்தது. உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளான சார்ஸ், எபோலா உள்ளிட்டவை பற்றி இங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்துவந்துள்ளன.

Published:Updated:
வுகான் கிருமியியல் ஆய்வு மையம்

கொரோனா வைரஸ் பரவ யார் காரணம்?

உலகம் முழுக்கத் தொக்கி நிற்கும் கேள்வி இது. சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகச் சொல்லப்படுகிறது. வுகான் நகரில் சீனாவின் அதி நவீன கிருமி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு, கடந்த 20 வருடங்களாக ஹெச்.ஐ.வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க சீனா முயன்று வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் சுமார் 1,500 கொடிய கிருமிகளை சீனா ஆராய்ந்து வருகிறது. அணுஆயுதத்தை விட மோசமான இந்தக் கிருமிகளை உச்சக்கட்ட பாதுகாப்புகளுடன் ஆய்வு செய்தாலும் சிறிய மனிதத்தவறுகள் கூட, ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப் பறித்து விட வாய்ப்புண்டு. கொரோனா வைரஸையும் இந்த ஆய்வு மையத்தில் பல ஆண்டு காலமாகவே சீன விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வுகான் கிருமியியல் ஆய்வு மையம் பி.எஸ்.எல் -4 வகையைச் சேர்ந்தது. உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளான சார்ஸ், எபோலா உள்ளிட்டவை பற்றி இங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்துவந்துள்ளன. இந்த ஆய்வகத்திலிருந்து வெளியேற்றப்படும் காற்று கூட சுத்திகரிக்கப்பட்ட பிறகே, வெளியே அனுப்பப்படும். இல்லையென்றால், காற்று வழியாக நோய்த் தொற்று பரவும் வாய்ப்பும் உண்டு. ஆய்வு என்ற பெயரில் சீனா ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவதும் வாடிக்கையானதுதான். கொரோனா விஷயத்திலும் அத்தகைய குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன.

வேலை இழப்பு
வேலை இழப்பு

இந்த ஆய்வு மையத்தில் பணியாற்றிய பெண் ஒருவரிடத்தில் கொரோனா தொற்றி அவர் மூலம் வெளியுலகுக்குப் பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.ஐ.வி நோய் குறித்த ஆராய்ச்சிக்காக, நோபல் பரிசு வென்ற பிரான்ஸைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் லூக் மோன்தேக்னர் கூறுகையில், ''வுகானில் உள்ள அசைவச் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதெல்லாம் கட்டுக்கதை. அங்குள்ள கிரிமியியல் ஆராய்ச்சி மையத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளது'' என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸால் உலக நாடுகள் லாக் டௌனில் இருப்பதால் முக்கியத் தொழில்துறைகள் முடங்கிப் போயுள்ளன. பொருளாதார பலம் பெற்ற நாடுகளாக அறியப்படும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. ஏற்கெனவே, அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் சீனா, அமெரிக்காவுக்கு ஏற்படுத்திய நஷ்டஈட்டுக்கு இழப்பீடாக ரூ.1,500 லட்சம் கோடி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வல்லரசு நாடாக இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த நாடு ஜெர்மனி. ஆட்டோமொபைல் துறையில் கொடி கட்டி பறக்கும் இந்த நாடு, கொரோனா வைரஸால் ஏற்பட்ட இழப்புக்கு சீனாவிடம் 130 பில்லியன் பவுண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல 'பைல்ட்' பத்திரிகை 'சீனா எங்களுக்குக் கடன்பட்டுள்ளது' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், ``கொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனியில் 4.2 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனி சுற்றுலாத்துறைக்கு 27 பில்லியன் டாலர்கள், சினிமாத்துறைக்கு 7 பில்லியன் டாலர்கள் சிறுதொழிற்துறைக்கு 50 பில்லியன் டாலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

ji jing ping
ji jing ping

இது தவிர, ஒரு ஜெர்மானியருக்குத் தலா 1,550 பவுண்டுகளை சீனா இழப்பீடாக தர வேண்டும்.

மிஸ்டர். ஜின்பிங் உங்களுக்கும் உங்கள் நாட்டு விஞ்ஞானிகளுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் மற்றும் அதன் தாக்கம் குறித்து தெரிந்துள்ளது. உலக நாடுகள் வுகானில் என்ன நடக்கிறது என்று கேட்ட போது, நீங்கள் உண்மையை மறைத்து உலகை இருட்டுக்குள் தள்ளியிருக்கிறீர்கள்'' என்று கூறியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஜி 7 நாடுகள் சார்பாக சீனாவிடமிருந்து 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டஈடு கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா 58 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனாவிடத்திலிருந்து நஷ்ட ஈடாகக் கேட்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வுகான் ஆராய்ச்சி மையத்திலிருந்து, கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கான, விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார். பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பிற வல்லரசு நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில்தான் உள்ளன. கொரோனா மட்டுமல்ல அதே போல கொடிய 1,500 வைரஸ்கள் வுகான் ஆராய்ச்சி மையத்தில் சீனா உருவாக்கி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் உள்ளன.

Trump
Trump
Patrick Semansky

உலக நாடுகளை இந்தத் தகவல் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வுகான் அசைவச் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்துதான் பரவியுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது. மேலும், சீனாவின் கையை மீறி கொரோனா உலக நாடுகளில் பரவியிருக்கலாம்; திட்டமிட்டு இந்த நோயைப் பரப்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சில நிபுணர்கள் சீனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

வல்லரசு நாடுகள் எப்போதுமே, தங்களின் பலத்தை உலக நாடுகளிடத்தில் நிரூபிக்கும் வகையில், இதே போன்று ஆராய்ச்சியில் தொடர்ந்து, ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளன. 2005 - ம் ஆண்டுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் விஞ்ஞானிகள் ரகசியமாக 'ஸ்டக்ஸ்நெட் ' (Stuxnet) என்ற கணினி வைரஸை உருவாக்கினர். இரான் நாட்டின் அணு ஆராய்ச்சி திட்டத்தில் பயன்படுத்தப்படும் கணினிகளின் கட்டுப்பாடு மற்றும் இயக்கத்தைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் Stuxnet வைரஸ் உருவாக்கப்பட்டது.

மனிதர்களைக் கொல்ல இந்த வைரஸ் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இரான் கம்ப்யூட்டர்களை மட்டுமல்லாமல் அருகிலுள்ள பல நாடுகளின் கணினிகளையும் இந்த வைரஸ் பாதித்தது. அது போலவே, கொரோனா வைரஸ் சீனாவின் கையை மீறி உலகில் பரவத் தொடங்கியிருக்கலாம் என்றும் சீன ஆதரவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

வுகான் ஆராய்ச்சி மையத்திலிருந்து கொரோனா பரவியதற்கான உறுதியான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ. ஏ- வை இந்தப் பணியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடக்கி விட்டுள்ளார்.

Corona safety measures
Corona safety measures

கொரோனா வைரஸ் தாக்கி 40,000க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர். ஆனால், கொரோனா பரவிய சீனாவில் 3,500- க்கும் குறைவானவர்களே இறந்தாக அந்த நாடு கணக்குக் காட்டியது. சமீபத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 4,632 என்று திருத்தியுள்ளது. ஏற்கெனவே , இரும்புத்திரை நாடு என்று அறியப்பட்ட சீனாவிலிருந்து உண்மைத் தகவல்களைப் பெறுவது என்பது கடினம். அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிடுபவர்கள், கொரோனா வைரஸ் குறித்து உண்மை நிலவரம் குறித்து கருத்து வெளியிடும் டாக்டர்கள் கூட மிரட்டப்பட்டுள்ளனர். அதனால், உண்மைத்தன்மையை வெளி உலகுக்குக் கொண்டு வருவதில் சி.ஐ.ஏ-வுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism