Election bannerElection banner
Published:Updated:

விடைபெறும் மாஸ்க்... தடுப்பூசிகளால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இஸ்ரேல்!

A man without a face mask walks by a "mask" graffiti
A man without a face mask walks by a "mask" graffiti ( Oded Balilty )

``அடையாளம் தெரியலைங்க..." என்று இனிமேல் யாரையும் சுலபமாகக் கடந்துவிட முடியாது... இவர்கள் முகத்தில்தான், இனி மாஸ்க் இருக்கப் போவதில்லையே..." என சந்தோஷத்துடன் சொல்கிறார் இஸ்ரேலிய மாணவி ஒருவர்.

தடுப்பூசிக்குப் பிறகும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட மக்களின் குரல் இன்று சுதந்திரமாக ஒலிக்கிறது...

``அடையாளம் தெரியலைங்க..." என்று இனிமேல் யாரையும் சுலபமாகக் கடந்துவிட முடியாது... இவர்கள் முகத்தில்தான், இனி மாஸ்க் இருக்கப்போவதில்லையே..." என சந்தோஷத்துடன் சொல்கிறார் இஸ்ரேலிய மாணவி ஒருவர்.

People without face masks hang out in downtown Tel Aviv, Israel, Sunday, April 18, 2021.
People without face masks hang out in downtown Tel Aviv, Israel, Sunday, April 18, 2021.
Oded Balilty

அப்படி என்னதான் நடக்கிறது இஸ்ரேலில்..?

தடுப்பூசி மூலமாக, கோவிட் நோயிலிருந்து மீண்ட முதல்நாடு என்ற பெருமையை எட்டியுள்ளது இஸ்ரேல். ``இனிமேல் வெளியே வரும்போது முகக்கவசங்கள் தேவையில்லை..." என்று பிரகடனப்படுத்தியதுடன் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றையும் முழுமையாகத் திறந்துள்ளது. அத்துடன் பயணங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது இஸ்ரேல்..!

ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய முதல் மனிதன் குடியேறிய நிலப்பகுதிகளில் ஒன்று என்றளவு பழைமை வாய்ந்த நிலப்பகுதி என்றாலும், இஸ்ரேல் என்ற தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டு இயங்கிவருவது நம்மைப் போலவே, 1947-ம் ஆண்டிலிருந்துதான். யூதர்கள், அராபியர்கள், கிறிஸ்துவர்கள் என, 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட இந்த சிறிய நாடு, கோவிட் பெருந்தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக சென்ற ஆண்டுவரை இருந்தது நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.

ஒருநாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான நோய்த்தொற்று என்றிருந்த நிலைமாறி, தற்சமயம் நாடு முழுவதும் 200-க்கும் குறைவான நோய்த்தொற்று என்ற நிலையும், முக்கியமாக தீவிரசிகிச்சை மற்றும் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து, 68% கூட்டு நோயெதிர்ப்பு ஆற்றல் (herd immunity) என்ற நிலையை எட்டியதும், தற்போதைய தளர்வுகளும் எப்படி சாத்தியமாயிற்று என்றால் தடுப்பூசி மட்டும்தான் என்று கைகாட்டுகிறது இஸ்ரேல்.

டிசம்பர் 2020 முதலாக, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை ஒரு தீவிர இயக்கமாகவே செயல்படுத்தி வந்த இஸ்ரேல், தனது நாட்டில் 16 வயதுக்கும் மேலானவர்களில் அநேகமாக அனைவருக்கும் ஃபைஸர் பயோ என்டெக் தடுப்பூசி வழங்கிவிட்டோம் என்கிறது. இது இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவிகிதத்துக்கும் அதிகம்.

அதேசமயம், ``நாங்கள் தடுப்பூசிகளால் நிம்மதி அடைந்துவிட்டாலும், அலட்சியமாக இல்லை. எப்போது வேண்டுமானாலும் வேறு உருமாறி இந்தக் கொரோனா வரக்கூடும். எனவே எச்சரிக்கையாகவே இருக்கிறோம்'' என்றும் சொல்கிறது இஸ்ரேல்.

People without face masks watch the sunset, in Tel Aviv, Israel, Sunday, April 18, 2021. mass vaccination drive.
People without face masks watch the sunset, in Tel Aviv, Israel, Sunday, April 18, 2021. mass vaccination drive.
Oded Balilty

இது ஒருபுறம் இருக்க, பாலஸ்தீனின் மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் இன்னுமும் வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையுமே அதிகமாக இருக்கிறது. அப்பகுதிகளில் தடுப்பூசியும் குறைவான எண்ணிக்கையில்தான் அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சிக்கலுக்கு, ``பாலஸ்தீன அரசுதான் இந்தப் பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டும்" என பதில் சொல்லி நழுவுகிறது இஸ்ரேல். குறிப்பாக அந்தப் பகுதிகளில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும்படி ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டபோது, ``அது தங்களுடைய பகுதிக்கு உட்பட்டதல்ல" என்று கூறி இஸ்ரேல் தட்டிக்கழித்து விட்டது.

``சுதந்திர மூச்சுக்காற்று" என்று இன்றைய இஸ்ரேல் நாளேடுகள் அனைத்தும் கொண்டாடிக் கொண்டிருக்க, உண்மையில் அதே பாதுகாப்பு உணர்வுடன்தான் இயங்கி வருகிறது இஸ்ரேல் அரசு.

அதாவது, தனியான இடங்களில் நீங்கள் சுதந்திரமாக இருந்தாலும் இப்போதும் மக்கள் கூடும் இடங்களான தியேட்டர் போன்ற உள்ளரங்குகளில் மாஸ்க் அணிவது காட்டாயம் என்பதுடன், பள்ளிகளிலும், மற்ற பயிற்சி வகுப்புகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என அனைத்தையும் முன்புபோலவே பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம், மே 23-ம் தேதி முதல் வெளிநாட்டுப் பயணிகளையும் வரவேற்கும் இஸ்ரேல், தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கோவிட் பரிசோதனை இதற்குக் கட்டாயம் அவசியம் என்று கூறியுள்ளது.

Israelis walk in a market in Tel Aviv, Israel, Sunday, April 18, 2021.
Israelis walk in a market in Tel Aviv, Israel, Sunday, April 18, 2021.
Sebastian Scheiner

யோசித்துப் பார்த்தோமேயானால், ஏற்கெனவே நியூசிலாந்து உட்பட்ட பல நாடுகள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திய அதே வழிமுறைகள்தான் இங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது புரிகிறது.

ஆனால், வெற்றி என்பது முனைப்புடன் இயங்கும் அரசாங்கமும், அதைப் பொறுப்புடன் ஏற்று நடக்கும் பொதுமக்களும் சேர்ந்து எடுக்கும் கூட்டு முயற்சி என்பதுதான் இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

`இஸ்ரேல் சிறிய நாடு. அங்கே இது எளிதில் சாத்தியமாகும். ஆனால், இங்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்று இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற பெரிய நாடுகள் தட்டிக்கழிக்கப் பார்க்கலாம். ஆனால், சீனாவும் பெரிய நாடுதான். அங்கேயும் கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது. சின்ன நாடு, பெரிய நாடு என்பதல்ல இங்கே பிரச்னை. எப்படி திட்டமிடுகிறோம்... எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில்தான் பிரச்னையே. இனியாவது விழித்துக் கொள்வோம்... கொரோனாவை வெல்வதற்கு அனைவரும் கரம் கோப்போம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு