Published:Updated:

குழந்தைக்கு இப்படியா மாஸ்க் போடுவது? - வைரல் போட்டோவுக்கு குவியும் கமென்ட்டுகள்!

mask ( Jandre Opperman insta )

முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர் என்று கமென்டுகள் எழுந்த நிலையில், மாஸ்க் மிகவும் இறுக்கமாக இல்லை, அதோடு குழந்தை நலமாக இருக்கிறதா என்பதில் குழந்தையின் அம்மா கவனமாக இருந்தார் என்று பதிலும் பதிவாகி உள்ளன.

குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது... குழந்தைகள் செய்யும் சிறு சிறு சேட்டைகளை, குறும்புத்தனங்களை படமெடுத்து, சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்வதுண்டு. அப்படி க்யூட்டாக இருக்கிறது எனக் குழந்தையின் படத்தைப் பதிவிட்டவருக்கு எதிர்மறையான கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.

face mask
face mask
Alberto Pezzali

ஜூலை 1-ம் தேதி ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு பயணப்பட்ட நியூசிலாந்து விமானம் ஒன்றில் குழந்தை ஒன்று பெரியவர்கள் அணியும் மாஸ்க்குடன் காட்சியளித்தது. அந்த மாஸ்க் குழந்தையின் முகத்தை முழுவதுமாக மூடியிருந்தது. கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் மாஸ்க்கில் துளைகள் போடப்பட்டு இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் (Jandre Opperman) குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ``குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

குழந்தைக்கு இப்படியா மாஸ்க் போடுவது? - வைரல் போட்டோவுக்கு குவியும்  கமென்ட்டுகள்!
Jandre Opperman insta

அதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. ``முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர்... பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது… குழந்தை சுவாசிக்க வேண்டாமா... அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் குழந்தையின் மாஸ்க்கை எடுத்து வீசி இருப்பேன்..." எனப் பல எதிர்மறையான கமென்ட்டுகள் குவிய ஆரம்பித்தன.

இவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, `மாஸ்க் மிகவும் இறுக்கமாக இல்லை, அதோடு குழந்தை நலமாக இருக்கிறதா என்பதில் குழந்தையின் அம்மா கவனமாக இருந்தார்' என ஒப்பர்மேன் தெரிவித்துள்ளார்.