Published:Updated:

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்

கொரோனாவின் தீவிரத்துக்கு சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் காட்டிய தாமதமே காரணம்!

பெயரைக் கேட்டவுடன் நடுங்கிவிடும் அளவுக்கு, நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது நாவல் கொரோனா வைரஸ். தரவுகளின்படி இன்றளவில், நாவல் கொரோனாவால் உலகளவில் 34,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம். மேலும் உலகளவில், 724 அப்பாவி மனித உயிர்களை தனக்கு இரையாக்கியுள்ளது இந்தக் கொடூர நோய்.

சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் காட்டிய தாமதம்
சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் காட்டிய தாமதம்
Twitter

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்தனை பேரை பலியாக்கிய கொரோனா வைரஸ், முதன்முதலில் கடந்த மாதம் 20-ம் தேதிதான் சீன அரசால் உறுதிசெய்யப்பட்டது. அதன்படி பார்த்தால், பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இன்றோடு 19 நாள்களே ஆகின்றன. ஒவ்வொரு நாளும், தன்னுடைய பாதிப்பை ஆயிரக்கணக்கில் பெருக்கிக்கொண்டு வருகிறது கொரோனா என்பதற்கு, இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில், கண்ணசையும் நேரத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிவிடும் இந்தக் கொரோனா எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இது எவ்வளவு கோரமாக மறைக்கப்பட்டது என நம்மில் பலருக்கும் தெரியாது. தெரியாதவர்களுக்கான கட்டுரைதான் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசம்பர் இறுதி - ஜனவரி தொடக்கம் வரையிலான காலம். 76 வயது முதியவர் பான், அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சிக்கும், சந்தைக்கும் சென்றுவிட்டு, புது வகை வைரஸ் பாதிப்புக்கான தாக்கத்தோடு திரும்பி வருகிறார் (அப்போது நாவல் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை). அறிகுறிகள் தெரியத்தொடங்கும் முன்பே பானிடமிருந்து, அவருடைய மகளுக்கு பாதிப்பு பரவுகிறது. இது, பான் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரே ஒரு நிகழ்வு மட்டும்தான்.

சீன பொது மக்கள்
சீன பொது மக்கள்

பான் குடும்பத்தைப்போல, பல ஆயிரம் குடும்பங்கள், வூகான் மாகாணத்தில் இருக்கின்றன. அந்த மக்கள் அனைவருமே, அன்றாடம் சந்தைகளுக்கும், பொது இடங்களுக்கும் சென்று புழங்கி, நோய்த்தொற்றை வீட்டுக்குப் பெற்று வந்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைவரையும் பாதித்தது ஒரே மாதிரியான வைரஸ்தான் என்பதால், எல்லோரும் ஒரே மாதிரியான அறிகுறிகளோடு (காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல்) மருத்துவமனையை நாடியுள்ளனர். இப்படி குறிப்பிட்ட அறிகுறிகளோடு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை, மருத்துவர்களும், லேப் டெக்னீஷியன்களும் உணர்கிறார்கள்.

சீன பொது மக்கள்
சீன பொது மக்கள்
AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES

டிசம்பர் இறுதியில், 27 பேருக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் டெக்னீஷியன்கள், உள்ளூர் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அந்த நேரத்தில், அவர்கள் அதை அரசுத் தரப்புக்குத் தெரிவித்தும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர், சீனாவின் தென் பகுதியான வூகானை சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்தப் புதிய வைரஸ் ஏதோவொரு விலங்கிடமிருந்துதான் பரவுகிறது என்பதைக் கண்டறிந்தமையாலும், சீன அரசு முதற்கட்ட நடவடிக்கையாகக் கடலுக்கு அருகில் இருக்கும் சந்தைகள், மொத்த வணிகம் மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை 'செயல்பட வேண்டாம்' என அறிவுறுத்தியது.

தேவையில்லாத பதற்றத்தைக் கிளப்ப வேண்டாம் என்று நினைத்த அரசு, `பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதால்தான் சந்தைகளை செயல்பட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்' என்ற அடிப்படை காரணத்தைக்கூட மக்களுக்குச் சொல்லி எச்சரிக்காமல் இருந்துள்ளது.

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தொற்று வைரைஸ் வியாதி இது என அறியாத காரணத்தால், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. விளைவு, வைரஸ் மிக வேகமாகப் பரவத்தொடங்கியது.

டிசம்பர் 30

சீனாவின் வூகான் மாகாணத்தைச் சேர்ந்த 34 வயது கண் மருத்துவர் லீ வென்லியாங், தனது மருத்துவ நண்பர்கள் இணையக் குழுவுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை டைப் செய்து அனுப்புகிறார். அதில், தான் பணிபுரியும் இடத்தை (வூகானை) சுற்றிய இடங்களில், 2003-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய சார்ஸ் தொற்றுநோயின் சாயலில், புதிய வகை தொற்று நோய் ஒன்று பரவிவருவதாகக் குறிப்பிடுகிறார் லீ. கூடவே, `இது சார்ஸ் பாதிப்பு இல்லையென்ற போதும் இதன் தீவிரத்தன்மை மிக மோசமாக இருக்கிறது' என்றும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, `மருத்துவ நண்பர்கள் அனைவரும் கவனமாக இருங்கள். உங்களிடம் வரும் காய்ச்சல், இருமல் நோயாளிகளிடம் கவனமாக இருங்கள். உங்களை நோய்த்தொற்று தாக்காமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையோடு செயல்படுங்கள்' என்றும் கூறியுள்ளார் லீ.

மருத்துவர் லீ - கொரோனா வைரஸ்
மருத்துவர் லீ - கொரோனா வைரஸ்

நான்கு நாள்கள் கழித்து, ஜனவரி தொடக்கத்தில், மருத்துவர் லீயை, பொய்யான செய்தியைப் பரப்பியதற்காகவும், மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தை உருவாக்க முயன்றதற்காகவும் கைதுசெய்ய உத்தரவிட்டது சீன அரசு. பின், `இனி இப்படி செய்யக்கூடாது' என எச்சரித்து, `மீறி செய்தால், உங்களைக் கைதுசெய்வோம்' என எச்சரித்து, `தான் கூறியது அனைத்தும் பொய்யான தகவல்கள்தாம் என்று அவரை எழுதி கையெழுத்திடவைத்து விடுதலை செய்தது அரசு. லீயைப் போலவே, வைரஸின் தாக்கம் குறித்துப் பொதுவெளியில் பேச முயன்ற 8 பேரை அந்த நேரத்தில் எச்சரித்தது சீனா.

லீ மீதான கைது நடவடிக்கைக்கு இடையில், சரியாக டிசம்பர் 31-ம் தேதி சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனக் கிளைக்கு, புது வைரஸ் வகை குறித்த தகவல்கள் சீன அரசால் தரப்பட்டுவிட்டன. அவர்கள் வைரஸ் குறித்து ஆராய்ச்சியையும், அதைத் தடுப்பதிலுள்ள தங்களின் பணியையும் அன்றே தொடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

லீ கைது செய்யப்பட்ட நாள்வரையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகப் பட்டியல் எண்ணிக்கை 40 - 50 என்றே அளவிலேயே இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, வைரஸ் அதிகமாகப் பரவி, ஜனவரி தொடக்கத்தில் எண்ணிக்கை நூற்றைத் தாண்டியது. இதற்குப் பிறகுதான், சீனாவின் சுகாதார அதிகாரிகளுக்கு ஏதோ தவறாக இருக்கிறதெனப் புரிகிறது.

சந்தைகள் மூடப்பட்ட பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை வைத்து, இந்த நோய், தொற்றுவகையைச் சேர்ந்தது (ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்) என்பதை அவர்கள் யூகிக்கிறார்கள். ஆனாலும், மக்கள் மத்தியில் அதுகுறித்து விழிப்புஉணர்வு எதுவும் தரப்படவில்லை.
தாமதத்தின் விலை...
அப்பாவி மனித உயிர்கள்.

`இந்தப் புதிய வைரஸ், 70 சதவிகிதத்துக்கும் மேல் சார்ஸ் வகை கொரோனா வைரஸ் போலவே இருக்கிறது' என்ற தகவல், சீனா முழுக்கப் பரவுகிறது. மக்கள் அனைவரும், இதை சார்ஸ் என நினைத்து அஞ்சத் தொடங்குகின்றனர். `இது சார்ஸ் இல்லை. எதுவென விரைவில் கண்டறிந்து சொல்கிறோம்' எனக் கூறிவிட்டு, மீண்டும் அமைதியாகிவிட்டது சீன அரசு.

சார்ஸ் - கொரோனா வைரஸ்
சார்ஸ் - கொரோனா வைரஸ்

உலக நாடுகள் இங்குதான் விழிக்கத் தொடங்கின. 'வூகானிலிருந்து பயணப்பட்ட மக்கள், மற்றும் நிமோனியா அறிகுறி தெரியவருபவர்கள் மருத்துவ உதவியை நாடவும் (ஜனவரி 8)' என்ற அறிக்கையை உலகளாவிய அளவில் வெளியிட்டு அலெர்ட் செய்தது அமெரிக்க நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையம். (For reference, click here) அப்போதும் சீனா, `இது என்ன வகை வைரஸ் எனக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறோம்', `விலங்குகளிடமிருந்து பரவுவதாகத் தெரிகிறது. ஆகவே சந்தைகள் யாவும் மூடப்பட்டுவிட்டன' போன்ற அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு மௌனம் காத்தது. 200 பேர் பாதிக்கப்படும் வரையில், வான்வழி - தரைவழி பயணம் தொடர்பான எந்த வரையறைகளும் சீனா சார்பில் மேற்கொள்ளப்படாமல் இருந்துள்ளது.

இவர்களின் இந்த அலட்சியத்தால், பாதிப்பை உறுதிசெய்து மக்களை அலெர்ட் செய்வதற்கு, ஜனவரி 20 வரை காலம் தாழ்த்திவிட்டனர். இதற்குள், இரண்டு இன்குபேஷன் பீரியட் முடிந்துவிட்டது.
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 221 என்றான போது, மக்கள் மத்தியில் `இது ஒரு தொற்றுநோய்' (For reference, click here) என்ற அறிவிப்பு விடப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விழித்த அரசு, இதற்குப் பிறகுதான் வூகானைச் சுற்றியுள்ள மாகாணங்களை அலெர்ட் செய்தது. மூன்று புதிய அவசர நிலை மருத்துவமனைகளை உருவாக்கியது. மக்களை, 'பொதுவெளியில் நடமாட வேண்டாம்' என்று அப்போதுதான் அறிவுறுத்தியது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
தொடர் ஆராய்ச்சிக்குப் பின், ஜனவரி மாதம் 20-ம் தேதியன்று, `இது புது (ஆங்கிலத்தில் `நாவல்') வகை கொரோனா வைரஸ்' என அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். அவர்கள் அறிவிக்கும்போது, ஒரே நேரத்தில் 282 பேர் நோயாளிகளாக உறுதிசெய்யப்பட்டிருந்தார்கள்.
பயணக் கட்டுப்பாடு
பயணக் கட்டுப்பாடு

அவர்களில் 51 பேர் பாதிப்பின் மோசமான நிலையிலும், 12 பேர் காப்பாற்றுவதே கடினம் என்ற நிலையிலும் இருந்தனர். அன்றைய தினம், ஆறு உயிரிழப்புகளும் வூகானில் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலத்தில் (டிசம்பர் இறுதி - ஜனவரி தொடக்கம் வரையிலான காலம்) பயணத்துக்கான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், வூகானிலிருந்து பயணம் மேற்கொண்ட 40,000க்கும் மேற்பட்டோர் அவரவர்களின் நாடுகளில் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

மாஸ்க்
மாஸ்க்

இதன் பிறகுதான், பரிசோதனைக் கூடங்கள், பரிசோதனைக் கருவிகள் யாவும் அதிகளவில் கொண்டுவரப்பட்டன. பயணிகள் அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'கைகழுவுங்கள், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்' போன்ற அறிவுரைகள் யாவும் தரப்பட்டன.

வைரஸ்
வைரஸ்
சீனாவின் இத்தனை அலட்சியத்துக்கும் சேர்த்து, இன்று கிடைத்திருக்கும் பரிசு.... 700 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்.

"இந்த விவகாரத்தில், உலக சுகாதார நிறுவனத்தையும் நாம் குறைசொல்லியே ஆகவேண்டியுள்ளது" என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

இது குறித்து அவரிடம் பேசியபோது,

"முதலில் சீன அரசைத்தான் நாம் குறை சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில் டிசம்பர் இடையிலேயே வூகானில் பாதிப்புகள் தொடங்கியுள்ளன. ஆனால் அதுகுறித்த செய்திகளோ அலெர்ட்டோ இல்லாமல் அந்த அரசு இருந்துள்ளது."

இவர்களின் இந்த அலட்சியத்தால், பாதிப்பை உறுதிசெய்து மக்களை அலெர்ட் செய்வதற்கு, ஜனவரி 20 வரை காலம் தாழ்த்திவிட்டனர். இதற்குள், இரண்டு இன்குபேஷன் பீரியட் முடிந்துவிட்டது. அறிகுறிகளின் தொடக்கக் காலத்திலேயே பிரச்னையைக் கண்டறியும்போது, அதைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் ஓரளவு எளிதாக இருக்கும். ஆனால் அதையும் அந்த அரசு தவறவிட்டுள்ளது.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

பொதுவாகவே எந்தவொரு வைரஸ் கிருமியுமே, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்போது கூடுதல் வீரியத்தோடு பரவும். இந்த நாவல் கொரோனா, வழக்கத்தைவிட அதிக ஆபத்தான மற்றும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் வகையாக இருப்பதால், அதை இன்குபேஷன் பீரியடில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே கூடுதல் மெனக்கெடல்கள் தேவைப்படும். நிலை அப்படியிருக்க, இரண்டு இன்குபேஷன் பீரியட்வரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இடைப்பட்ட நாள்களில், கட்டுப்பாடின்றி பரவியும் இருக்கிறது. வேறென்ன வேண்டும் ஒரு வைரஸ் பரவ?

அடுத்தது, உலக சுகாதார நிறுவனம். இவர்களுக்கு டிசம்பர் இறுதியிலேயே பிரச்னை தெரியவந்துள்ளது. ஆனால், அமைதி காத்துள்ளனர்.

`இது சீனாவின் பிரச்னை, சீனா சரிசெய்துகொள்ளும்' என்ற நினைப்பிலேயே இருந்துவிட்டு, தங்களின் செயல்பாடுகளில் தாமதம் காட்டியிருக்கிறார்கள் அவர்கள். பிரச்னை தீவிரமான பின்னரும், `இது ஒரு தொற்று வியாதி' என அறிவிப்பதிலும் தாமதம்! அதை தொடர்ந்து, `உலக மருத்துவ அவசர நிலை' என அறிவிப்பதிலும் தாமதம். மூன்று கட்ட மீட்டிங் வைத்து, மூன்று வாரங்கள் கழித்து, `உலக மருத்துவ அவசர நிலை' என அறிவித்தார்கள் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள். காரணம், இந்த அறிவிப்பு வெளியானால், உலக சந்தையில் பொருளாதார சிக்கல்களை சீனா சந்திக்கக்கூடும் என்ற அவர்களின் எண்ணம். இந்தத் தாமதத்தின் விலை, அப்பாவி மனித உயிர்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எந்தவொரு நோய் பாதிப்புமே, குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு, தனது சக்தியை இயல்பாகவே இழக்கத் தொடங்கும். இந்த நாவல் கொரோனா வைரஸூக்கும் அப்படியான நாள் கணக்கு உண்டு. அதன் பிறகு அது தன்னால் அழிந்துவிடும். இருப்பினும், இது கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் வகையைச் சேர்ந்தது என்பதால், அதன் ஆயுட்காலம் வரை அதை நாம் காத்திருக்கக்கூடாது. விரைந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பிரச்னை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். விரைந்து, மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவோமாக.

இப்போதைக்கு நாம் ஆறுதலடையும் விதத்திலான ஒரே ஒரு விஷயம், இப்போதாவது சீன அரசு செயல்படுகிறது என்பது மட்டும்தான்.

பத்து நாள்களுக்குள் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் தங்கும் வகையிலான மருத்துவமனைகளைக் கட்டியது, பயணக்கட்டுப்பாடுகளை நெறிப்படுத்தியிருப்பது, வூகான் மற்றும் சுற்றியுள்ள மாகாணங்களை முடக்கியிருப்பது என, வேகம் காட்டிக்கொண்டிருக்கிறது சீன அரசு. ஆனால், இப்போது தீவிரமாகச் செயல்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அந்த வகையில் நிர்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் இவர்களின் தீவிர செயல்பாட்டைப் பாராட்டவும் முடியவில்லை" என வேதனை தெரிவித்தார் டாக்டர்.

கொரோனா வைரஸ்  தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

தற்போதைக்கு, சீனாவைத் தாண்டியும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தெரிகிறது. இந்தியாவில், மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் யாவும், சீனாவைப்போல அலட்சியமாக இல்லாமல், முதல் நிலையிலேயே தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என நம்புவோம்.