Published:Updated:

`செவிலியர் அம்மா; பார்க்க வந்த சிறுமி...தொடவிடாத கொரோனா!' - சீன மருத்துவமனை நெகிழ்ச்சி #Video

செவிலியர் லியு
செவிலியர் லியு

பல மருத்துவர்கள், தங்கள் உயிரைப் பொருட்டாகக் கருதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

கொரோனா வைரஸ் - கடந்த சில வாரங்களாகவே உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெயர். சீனாவில் தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளில் பரவிவரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மரணமேகூட நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

சிறுமி செங் ஷிவென்
சிறுமி செங் ஷிவென்
dailymail

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதாகத் தொற்றிக்கொள்ளும் என்ற காரணத்தால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இது பரவும் என்ற காரணத்தால், சீனாவில் இந்த வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட தங்கள் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல மருத்துவர்கள், தங்கள் உயிரையும் பொருட்டாகக் கருதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவருகின்றனர்.

செவிலியர் லியு
செவிலியர் லியு
dailymail

இந்நிலையில், சீன மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியருக்கும், மருத்துவமனைக்கு அவரைக் காண வந்த அவரின் 9 வயது மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி, சமுக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி

அதில், மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் லியுவை வெகுநாள் கழித்து காணவருகிறார், அவரின் 9 வயது மகளான செங் ஷிவென். ஆனால், இருவராலும் நெருங்க முடியவில்லை. செவிலியரான லியு, பாதுகாப்பு உடைகள் மற்றும் முகமூடி அணிந்து தன் மகள் நிற்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் நிற்கிறார். தாயும் மகளும் தூரத்திலேயே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

மகள் தன் தாயிடம், `மிஸ் யூ அம்மா' என்கிறார். லியு, தொலைவிலிருந்தே தன் மகளை அணைத்துக்கொள்வதுபோல காற்றில் கைகளை விரிக்கிறார். அவரின் மகளும் அதுபோலவே செய்கிறார். இருவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இறுதியில், தன் தாய்க்காகத் தான் எடுத்து வந்த உணவை ஓர் இடத்தில வைக்கிறார் செங் ஷிவென். அதை லியு எடுத்துக்கொள்கிறார்.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோ, காண்பவர்களைக் கண்கலங்கச் செய்கிறது.

பின் செல்ல