Published:Updated:

கொரோனா: `அடுத்த வாரம் என்ன நடக்குமோ?' - 500% அதிகரித்த தொற்று; கலக்கத்தில் நெதர்லாந்து!

Netherlands (Representational Image)
Netherlands (Representational Image) ( Image by Michael de Groot from Pixabay )

இரவு நேர கேளிக்கைகள், விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிருங்கள் என்று தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால்...

இந்தியாவில் பல உயிர்களைப் பறித்த டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவிக்கொண்டிருக்கிறது. ஜூன் 26-ம் தேதி முதல் ஊரடங்கைக் கிட்டத்தட்ட முழுதாகத் தளர்த்தியுள்ள நெதர்லாந்து நாட்டிலும் இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது, ஊரடங்கைத் தளர்த்திய ஒரு வாரத்திலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Party - Representational Image
Party - Representational Image
Freepik
Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

ஜூன் 26-ல் ஊரடங்கைத் தளர்த்திய நெதர்லாந்து அரசு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், இரவு நேர கேளிக்கைகள், விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிருங்கள் என்று தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இதை நெதர்லாந்தின் இளைய தலைமுறையினர் புறந்தள்ளியதுதான் தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

நெதர்லாந்தில் 20 வயதுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம். கடந்த ஒரு வாரத்தில் 18 - 24 வயதினரிடையே மட்டும் 262% தொற்று அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் 11% வரை அதிகரிப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

COVID-19 patient
COVID-19 patient
AP Photo / Jeff Roberson
Covid Questions: ஃபைஸர் முதல் டோஸ் மட்டும்தான் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு எடுத்துக்கொள்ளலாமா?

இது இன்னும் அதிகரித்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் தொற்று பரவினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்கிற நெதர்லாந்து அரசு, வரப்போகும் நாள்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றிருக்கிறது. அந்நாட்டின் வைராலஜிஸ்ட் மரியான் கூப்மன்ஸ் (Marion Koopmans), ``அடுத்த வாரம் என்ன நடக்குமோ என்று நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் பதற்றமாக.

பாடமாக எடுத்துக்கொள்வோம்!

அடுத்த கட்டுரைக்கு